விஜய் ஆண்டனி நடிக்கும் அரசியல் த்ரில்லர் படம் - ஜோடி சேரும் காவ்யா தாபர்

அரசியல் கலந்த த்ரில்லர் படத்தில் நடிக்கிறார் விஜய் ஆண்டனி இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிக்கிறார் காவ்யா தாபர் இவர் "மார்க்கெட் ராஜா MBBS" படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.

சென்னை: திரில்லரான படங்களை தேர்வு செய்து நடிக்கும் விஜய் ஆண்டனி மறுபடியும் அரசியல் திரில்லர் படத்தில் நடிக்கிறார், அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் மார்க்கெட் ராஜா MBBS" படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான காவ்யா தாபர்.

பிரசாந்த் நடித்த ஜாம்பவான் , அர்ஜுன் நடித்த வல்லக்கோட்டை , சசிகுமார் - நிக்கிகல்ரானி நடிப்பில் வெளியாக இருக்கும் ராஜ வம்சம் ஆகிய படங்களின் தயாரிப்பை தொடர்ந்து தற்போது மெட்ரோ பட இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கும் புதிய பெயரிடப்படாத படத்தை T .D ராஜா தயாரிக்கிறார்.

Kavya Thapar pair with Vijay Antonys next movie

இந்த புதிய படம் அரசியல் கலந்த திரில்லர் படமாக இருக்கும்னு சொல்றாங்க. விஜய் ஆண்டனி ஹீரோவா நடிக்கிற இந்த படத்துல அவருக்கு ஜோடி காவ்யா தாபர். மாடலாக வலம் வந்த காவ்யா தாபார், ' ஈ மாயா ப்ரேமிட்டோ ' எனும் தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

தெகிடி படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான நிவாஸ் கே பிரசன்னா இப்படத்திற்கு இசையமைக்கிறார். N .S உதயகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். இணை தயாரிப்பு - ராஜா சஞ்சய் .

எமன் என்கிற அரசியல் திரில்லர் படத்தில் நடித்தார் விஜய் ஆண்டனி. மீண்டும் புதிய அரசியல் படத்தில் கமிட் ஆகியிருக்கிறார். இந்த படத்தோட சூட்டிங் அடுத்த மாதம் தொடங்கும்னு எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே மூடர்கூடம் நவீனோட அக்னி சிறகுகள் படத்திலயும், தமிழரசன் பாபு யோகேஸ்வரனோட தமிழரசன் படத்திலயும் பிஸியாக நடிச்சிட்டு வர்றார். இப்போ ஆனந்த கிருஷ்ணன் படத்தில நடிக்கப் போறார். இசையமைப்பாளரா இருந்த விஜய் ஆண்டனி நடிகர் ஆனதுக்கு அப்புறம் அவரோட லெவலே வேற மாதிரி ஆகிருச்சு.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X