கயல் ஆனந்தி நடிக்கு ஒயிட் ரோஸ்
நடிகர்கள் கயல் ஆனந்தி, ஆர் கே சுரேஷ், விஜித் நடிப்பில் உருவாகி திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் ஒயிட் ரோஸ்.
நல்ல கதையம்சம் கொண்ட திரைக்கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் கயல் ஆனந்த்தின் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் ஒயிட் ரோஸ். இயக்குநர் ராஜசேகர் இயக்கியுள்ள இந்தத் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் ஆர்.கே.சுரேஷ் நடித்துள்ளார்.

க்ரைம் த்ரில்லராக உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் சுதர்ஷன் இசையமைத்துள்ளார். இவர் முன்னதாக பர்மா, என்னோடு விளையாடு, ஒரு கோடை மர்டர் மிஸ்டரி ஆகிய படங்களுக்கு இசையமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் டிரைலர் ஏற்கெனவே வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் "I've Arrived நானே வந்தேன்" எனும் பாடலை வெளியிட்ட நடிகர் ஆர்யா "பவர்ஃபுல் சாங்" எனப் பதிவிட்டு பாராட்டியுள்ளார். இந்தத் திரைப்படம் ஏப்ரல் 5ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.


Click it and Unblock the Notifications











