கமலி ஃப்ரம் நடுக்காவேரி படத்தில் நடிக்க வேணாம்னு அட்வைஸ் பண்ணாங்க... கயல் ஆனந்தி பேச்சு!

சென்னை : கயல் ஆனந்திக்கு பரியேறும் பெருமாள் திரைப்படத்திற்கு பிறகு இப்பொழுது கமலி ஃப்ரம் நடுக்காவேரி படம் ரிலீசாக உள்ளது.

இதுவரை ஹீரோக்களுடன் ஜோடி போட்டு மட்டுமே நடித்து வந்த கயல் ஆனந்தி இந்த படத்தில் நடிகைக்கு முக்கியத்துவம் தரும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இதுபற்றி பட விழாவில் பேசிய ஆனந்தி இந்த படம் பார்க்கும் அனைவரையும் இன்ஸ்பயர் பண்ணும் என கூறியுள்ளார்.

பிரபுசாலமனின் கயல்

பிரபுசாலமனின் கயல்

மிகச் சிறந்த நடிகை ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பு என தமிழ் சினிமாவில் முன்னணி இடத்தை விரைவில் எட்டிப்பிடிக்க போகும் நடிகை கயல் ஆனந்தி தனது ஒவ்வொரு படங்களிலும் அனைவரையும் பிரமிக்க வைத்து வருகிறார். தமிழுக்கு பொறியாளன் படத்தின் மூலம் அறிமுகமான இவர் பிரபுசாலமனின் கயல் படத்தில் நடித்து அனைவரையும் உருக வைத்து இருந்தார்.

கதிருக்கு ஜோடியாக

கதிருக்கு ஜோடியாக

இயக்குனர் பா.ரஞ்சித் தயாரிப்பில் மாரிசெல்வராஜ் இயக்குனராக அறிமுகமான பரியேறும் பெருமாள் சமீபத்தில் வெளியாகி விருதுகளுடன் வசூலையும் வாரி குவித்தது. அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்திழுக்க இந்த திரைப்படத்தில் கதிர் ஜோடியாக நடித்து மீண்டும் தன்னை ஒரு சிறந்த நடிகை என நிரூபித்து இருப்பார்.

 திடீரென திருமணம்

திடீரென திருமணம்

மூடர்கூடம் நவீன் தற்போது இயக்கி நடித்து வரும் அலாவுதீனும் அற்புத கேமராவும் படத்தில் கதாநாயகியாக நடித்து வரும் இவர் அசோசியேட் இயக்குனருடன் காதலில் விழுந்து சமீபத்தில் இவர்களது திருமணம் திடீரென நடைபெற்றது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. திருமணத்திற்குப் பிறகும் படங்களில் நடிப்பதை தொடர்ந்து வருகிறார்.

முதன்முறையாக நாயகிக்கு முக்கியத்துவம்

முதன்முறையாக நாயகிக்கு முக்கியத்துவம்

ஹீரோக்களுடன் இணைந்து ஜோடி போட்டு நடித்து வந்த ஆனந்தி இப்பொழுது முதன்முறையாக நாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதையில் நடித்திருக்க "கமலி ஃப்ரம் நடுக்காவேரி" படத்தை இயக்குனர் ராஜசேகர் துரைசாமி இயக்கி இருக்கிறார். இதன் படவிழாவில் சமீபத்தில் கலந்துகொண்ட ஆனந்தி படத்தில் நடித்த அனுபவத்தை பற்றி பகிர்ந்து கொண்டுள்ளார்.

ஒரு இடத்தில் கனெக்ட்

ஒரு இடத்தில் கனெக்ட்

இதில் அவர் பேசியதாவது 14 வயது முதல் 25 வயது வரை ரொம்ப கஷ்டமான டைம் அதுல டிஸ்ட்ராக் ஆச்சுன்னா லைஃப் கேள்விக்குறிதான். இந்த படம் ரொம்ப இன்ஸ்பைரிங்கான ஸ்டோரி பொண்ணுங்க கண்டிப்பா இந்த படத்த பார்த்தா ஏதாவது ஒரு இடத்தில் கனெக்ட் ஆவாங்க அவ்வளவு இன்ஸ்பைரிங்கா இருக்கும். பெற்றோர்களும் இந்த படத்த பார்த்தா கண்டிப்பா அவங்களோட பொண்ணுங்களுக்கு என்கரேக்ஜ்மெண்ட்டா இருப்பாங்க.

பெஸ்ட் ஒர்க்கா இருக்கும்

பெஸ்ட் ஒர்க்கா இருக்கும்

ஃபீமேல் ஓரியண்டட் ஸ்டோரின்னு சொன்னதும் நான் கொஞ்சம் தயங்கினேன். சில பேர் அட்வைஸ் எல்லாம் பண்ணாங்க இந்த மாதிரி ஸ்டோரி பண்ண வேணாம்னு. ஆனால் டைரக்டர் சார் ஸ்டோரிய என்கிட்ட சொன்னா உடனே நான் முடிவு பண்ணிட்டேன் இந்த ஸ்டோரி நான் மட்டும்தான் பண்ணும்னு. கமலி ஃப்ரம் நடுக்காவேரி என்னோட சினிமா கேரியர்லயே பெஸ்ட் ஒர்க்கா இருக்கும். இந்த மாதிரி ஸ்டோரி கிடைச்சதுக்கு நான் ரொம்ப லக்கி. இவ்வாறு ஆனந்தி பேசியிருக்க இந்த படம் வரும் பிப்ரவரி, 19ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.

More from Filmibeat

Read more about: anandhi
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X