வெங்கட் பிரபு படத்தில் வில்லனாக நடிக்கும் பிரபல இளம் நடிகர்!

சென்னை : இயக்குனர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான மாநாடு சக்கை போடு போட்டு வசூலை அள்ளி மாபெரும் வெற்றி பெற்றது

இந்த நிலையில் அடுத்த படத்தின் வேலைகளை வெங்கட்பிரபு துவங்கி உள்ளார்

ராக்போர்ட் எண்டர்டெயின்மென்ட் மற்றும் வெங்கட் பிரபுவின் ப்ளாக்டிக்கெட் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் அசோக் செல்வன் ஹீரோவாக நடிக்க வில்லனாக பிரபல இளம் நடிகர்களுடன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

போலீஸ் அதிகாரியாக

போலீஸ் அதிகாரியாக

கலகலப்பான திரைப்படங்களுக்கு பெயர் போன இயக்குனர் வெங்கட்பிரபு சமீப காலமாக சீரியஸான கதையை இயக்கி அதிலும் வெற்றி கண்டு வருகிறார். அந்த வகையில் நடிகர் சிம்புவின் நடிப்பில் உருவாகி வந்த மாநாடு சமீபத்தில் திரையரங்குகளில் வெற்றிகரமாக வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. அரசியல் கலந்த திரில்லர் கதை களத்தில் வெளியான மாநாடு டைம் லூப் பாணியில் வெளியானது. எஸ் ஜே சூர்யா இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து பிரமாதப்படுத்தியிருப்பார்.

மூன்று நடிகைகள் இதில் கதாநாயகிகளாக

மூன்று நடிகைகள் இதில் கதாநாயகிகளாக

மாநாடு திரைப்படம் பல தடைகளையும் பிரச்சனைகளையும் தாண்டி திரையரங்குகளில் வெற்றிகரமாக வெளியாகி விஸ்வரூப வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அந்த சந்தோஷத்தில் தனது அடுத்த படத்தின் பணிகளை துவங்கி உள்ளார்.ராக்போர்ட் எண்டர்டெயின்மென்ட் மற்றும் வெங்கட் பிரபுவின் ப்ளாக்டிக்கெட் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறது. இளம் நடிகர் அசோக் செல்வன் இதில் கதாநாயகனாக நடிக்க சம்யுக்தா ஹெக்டே, ஸ்ம்ருதி வெங்கட் மற்றும் ரியா சுமன் என மூன்று நடிகைகள் இதில் நடிக்கின்றனர். வித்தியாசமான கதைக்களத்தில் காமெடி கலந்த காதல் படமாக இப்படம் உருவாகிறது. இந்தப் படத்திற்கு வெங்கட் பிரபுவின் தம்பியும் நடிகருமான பிரேம்ஜி இசையமைக்கிறார்.

முக்கியத்துவம் அதிகமாக கொடுத்திருப்பார்

முக்கியத்துவம் அதிகமாக கொடுத்திருப்பார்

பொதுவாக வெங்கட் பிரபுவின் திரைப்படம் என்றால் அதில் வில்லனுக்கு சற்று முக்கியத்துவம் அதிகமாக கொடுத்திருப்பார். மாநாடு படத்திலும் அதே மேஜிக்கை நிகழ்த்தி காட்டியிருப்பார். இந்த நிலையில் இந்த படத்தில் வில்லனாக நடிக்க பிரபல இளம் நடிகர் கயல் சந்திரனை வெங்கட்பிரபு ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

கயல் சந்திரன்

கயல் சந்திரன்

கயல் படத்தில் ஹீரோவாக நடித்து அறிமுகமான கயல் சந்திரன் இந்த படத்தில் வில்லனாக நடிக்க உள்ளாராம். விருதுகளை வாங்கிக் குவித்த கயல் படத்தில் மிகவும் நேச்சுரலான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுக்களைப் பெற்றவர் கயல் சந்திரன். அதன்பிறகு ரூபாய், திட்டம் போட்டு திருடுற கூட்டம், கிரகணம், பார்ட்டி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதுவரை ஹீரோவாக நடித்து வந்த கயல் சந்திரன் முதல் முறையாக வில்லனாக நடிக்க இருப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X