'கயல்' சந்திரன்-சாதனா டைடஸுடன் 'கூட்டணி' அமைத்த பார்த்திபன்!

By Manjula

சென்னை: 'கயல்' சந்திரன் - சாதனா டைடஸ் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஜூலை 15ம் தேதி தொடங்குகிறது.

பிரபு சாலமனின் 'கயல்' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான சந்திரன் அடுத்ததாக அறிமுக இயக்குநர் சாய் சுதர்சன் இயக்கும் புதிய படமொன்றில் நடிக்கவிருக்கிறார்.

Kayal Chandran Next Film Details

காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் இப்படத்தில் சந்திரனுக்கு ஜோடியாக 'பிச்சைக்காரன்' புகழ் சாதனா டைடஸும், வில்லனாக பார்த்திபனும் நடிக்கின்றனர்.

சந்திரன் இப்படத்தில் ஐடி ஊழியராகவும், அவருக்கு சித்தப்பாவாக பார்த்திபனும் நடிக்கின்றனர். இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் ரகு ''சிலை திருடும் கும்பல் ஒன்றின் தலைவராக பார்த்திபன் நடிக்கிறார்.

சிறியளவில் திருட்டுகளை செய்துவரும் கும்பல் திடீரென பெரிதாக ஒரு திருட்டை நடத்தத் திட்டமிடுகின்றனர். அப்போது ஏற்படும் நிகழ்வுகளை வைத்து இயக்குநர் நகைச்சுவையாக இப்படத்தின் கதையை அமைத்திருக்கிறார்'' என்றார்.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை 15ம் தேதி துவங்குகிறது. படம் குறித்த மேலும் பல தகவல்களை படக்குழு விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சந்திரன் தற்போது 'கிரகணம்', 'ரூபாய்' போன்ற படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X