twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    600 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகும் கயல்?

    By Mayura Akilan
    |

    கும்கி வெற்றிக்குப் பிறகு பிரபு சாலமன் இயக்கியிருக்கும் படம் கயல். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் 600 தியேட்டர்களில் படம் ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    மைனா', 'கும்கி' போன்ற வெற்றிபடங்களை இயக்கிய பிரபுசாலமன் படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பிற்குள்ளான படங்களின் வரிசையில் 'கயல்' படமும் இடம்பிடித்துள்ளது.

    முன்பே அறிவித்தது போல் படம் டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் அன்று வெளியாகிறது.படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு ஆடியோ மற்றும் காட்சிகளில் ஒரு கட் கூட இல்லாமல் யு சான்றிதழ் வழங்கி உள்ளனர்.

    சந்திரன் என்ற புதுமுகம் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ‘பொறியாளன்' ஆனந்தி நடிக்கிறார். டி.இமான் இசையமைக்க, ஒளிப்பதிவு செய்கிறார் வி.மகேந்திரன். எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ், காட் பிக்சர்ஸ் பட நிறுவனத்துடன் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளது.

    சுனாமி கதை

    சுனாமி கதை

    சுனாமியின் தாக்குதலையும், தாக்குதலினால் பாதிக்கப்பட்ட மக்களின் கண்ணீர் கதைகளையும் சொல்லும் விதமாக 'கயல்' படம் அமைக்கப்பட்டிருக்கிறதாம். இதனால் இதே நாளில் வெளியிட்டால் பத்து வருடத்திற்கு முன்பு நடந்த இயற்கையின் கோர தாண்டவம் மக்களுக்கு ஞாபகம் வரும் என்பதால் ‘கயல்' படத்தை டிசம்பர் 25ஆம் வெளியிடுகின்றனர்.

    காதல் கதை

    காதல் கதை

    ‘‘இது முழுக்க முழுக்க காதல் படம் தான். ஒரு சின்னஞ்சிறிய அறைக்குள்ளேயே தனது வாழ்க்கையை என எந்தவித பொழுதுபோக்கு விஷயங்களும், டி.வி விஞ்ஞான வளர்ச்சி தெரியாத ஒரு பெண் கயல். அப்படிப்பட்ட பருவ வயதில் அவளை சந்திக்கும் ஒருவனின் உணர்வுபூர்வமான சொற்கள் - அவள் மனதில் ஏற்படுத்திய மாற்றம், அது காதலா என்று கூட உணர முடியாத பக்குவம், அவன் சொன்ன அந்த வார்த்தைகள் அதுவும் தன்னை பற்றி யாரிடமோ பேசிக் கொண்டிருந்த வார்த்தைகள், கயலை அவனை நோக்கி ஈர்க்கிறது.

    காதலின் பதிவு

    காதலின் பதிவு

    2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி ஏற்பட்ட சுனாமியால் உலக வரலாற்றில் கருப்புதினமாக உணரப்பட்டது. அந்த 2004 ம் ஆண்டு நடக்கும் காதல் கதைதான் ‘கயல்'. அவன் யார்? எங்கே இருப்பான் என்று கூட தெரியாமல் அவனைத் தேடி அவள் போன காதல் பதிவுதான் ‘கயல்' என்கிறார் பிரபு சாலமன்.

    பயணப்பட்டோம்

    பயணப்பட்டோம்

    உணர்வுகளை கதையின் மூலமும், பார்வைக்கு விஷுவல் மூலம் திருப்திப்படுத்தவும் அதிகமாக உழைத்திருக்கிறாராம். படத்தில் ஒரு பயணப் பாடல் வருகிறது. அதற்காக நிறையவே பயணப் பட்டிருக்கிறோம். பத்து வினாடிகளே இடம்பெறும் ராஜஸ்தான் காட்சிகள் - மூன்றே மூன்று ஷாட்டுகளுக்காக சிரப்புஞ்சி போனோம். லே, லடாக் போன்ற இடங்களில் மைனஸ் 13 டிகிரி குளிரில் ஐந்து ஷாட் மட்டுமே தேவைக்காக படமாக்கினோம் என்கிறார் பிரபு சாலமன்.

    டால்பி அட்மாஸ்

    டால்பி அட்மாஸ்

    படத்தில் சவுண்டுக்கான முக்கியத்துவத்தை இதில் உணர்வீர்கள். டால்பி அட்மாஸ் விஷயத்திற்காக நிறைய உழைத்திருக்கிறோம். சுனாமி காட்சிகள் நிச்சயம் புது மாதிரியான உணர்வை ஏற்படுத்தும்.

    600 தியேட்டர்களில் கயல்

    600 தியேட்டர்களில் கயல்

    தமிழ்நாட்டில் 300 தியேட்டர்களில் கயல் படம் வெளியாகிறதாம். ஆந்திரா, கேரளா என உலகம் முழுவதும் 600 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறதாம்.

     இமானின் இசை

    இமானின் இசை

    வழக்கமாக பிரபுசாலமன் படங்களின் அனைத்துப் பாடல்களும் ஹிட்டாகும். அதேபோல் இமான் இசையில் ‘கயல்' படத்தின் பாடல்களும் பட்டி தொட்டி எங்கும் ஹிட்டானதோடு ஐ டியூனிலும் இடம் பிடித்துள்ளதாம்.

    டிசம்பர் 25ல் போட்டி

    டிசம்பர் 25ல் போட்டி

    இதே டிசம்பர் 25ம் தேதி 'எனக்குள் ஒருவன்', 'இசை', 'கப்பல்', 'மீகாமன்', மற்றும் ‘வெள்ளக்கார துரை' ஆகிய படங்கள் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Kayal was scheduled to release on Dec 25 , 2014 for the Christmas weekend.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X