twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'சுனாமி தின' வெளியீடாக வருகிறது கயல்!

    By Shankar
    |

    சுனாமி மாதமான டிசம்பரில் வெளியாகிறது பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகியுள்ள கயல் திரைப்படம்.

    'கும்கி' படத்திற்கு பிறகு பிரபு சாலமன் இயக்கும் புதிய படம் ‘கயல்'. இப்படத்தில் சந்திரன் என்ற புதுமுகம் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஆனந்தி நடிக்கிறார். மேலும், வின்சன்ட், ஆர்த்தி, ஜெமினி ராஜேஸ்வரி, யார் கண்ணன், பாரதி கண்ணன், ஜேக்கப் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

    இசை வெளியீடு

    இசை வெளியீடு

    இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடந்தது. இதில், நடிகர்கள் சிவகார்த்திகேயன், ஆர்யா, விக்ரம் பிரபு, விமல், தம்பி ராமையா, சூரி, நடிகைகள் அஞ்சலி, அமலாபால் உள்ளிட்ட பலரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இப்படத்தை எஸ்கேப் ஆர்டிஸ் மோஷன் பிக்சர்ஸ் - காட் பிக்சர்ஸ் ஆகிய பட நிறுவங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

    சுனாமி

    சுனாமி

    படம் குறித்து இயக்குனர் பிரபு சாலமன் கூறுகையில், "சுனாமியால் டிசம்பர் 26, 2004 ம் ஆண்டு உலக வரலாற்றில் கருப்பு தினமாக உணரப்பட்டது. அந்த 2004-ம் ஆண்டு நடக்கும் காதல் கதைதான் ‘கயல்'.

    பயணப் பாடல்

    பயணப் பாடல்

    உணர்வுகளை கதையின் மூலமும், பார்வைக்கு விஷுவல் மூலம் திருப்திப்படுத்தவும் அதிகமாக உழைத்திருக்கிறோம். படத்தில் ஒரு பயணப் பாடல் வருகிறது. அதற்காக நிறையவே பயணப்பட்டிருக்கிறோம்.

    சிரபுஞ்சி

    சிரபுஞ்சி

    பத்து வினாடிகளே இடம்பெறும் ராஜஸ்தான் காட்சிகள் - மூன்றே மூன்று ஷாட்டுகளுக்காக சிரப்புஞ்சி போனோம். லே, லடாக் போன்ற இடங்களில் மைனஸ் 13 டிகிரி குளிரில் ஐந்து ஷாட் மட்டுமே தேவைக்காக படமாக்கினோம்.

    டால்பி அட்மாஸ்

    டால்பி அட்மாஸ்

    படத்தில் ஒலித் தரத்தின் முக்கியத்துவத்தை இதில் உணர்வீர்கள். டால்பி அட்மாஸ் விஷயத்திற்காக நிறைய உழைத்திருக்கிறோம். சுனாமி காட்சிகள் நிச்சயம் புது மாதிரியான உணர்வை ஏற்படுத்தும்.

    டிசம்பரில்

    டிசம்பரில்

    வருகிற டிசம்பர் மாதம் 300 தியேட்டர்களுக்கு மேல் ‘கயல்' படம் வெளியாக உள்ளது. சுனாமி தினமான டிசம்பர் 26-க்கு ஒரு நாள் முன்பு இந்தப் படம் வெளியாகும், " என்றார்.

    English summary
    Prabhu Solomon's Kayala is releasing on December 15th to remember Tsunamy day.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X