கணவருடன் ஏற்பட்ட பிரச்னை?.. ஃபினாயிலை குடித்த கயல் சீரியல் நடிகை.. அதிர்ச்சி தகவல்
சென்னை: சின்னத்திரையில் சீரியல்களில் நடித்து வந்த நடிகை ஒருவர் மருந்தை குடித்திருக்கும் செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இவர், பிரபலமான சீரியல் ஒன்றில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த செய்தி அறிந்த சக நடிகைகள் என்ன காரணம் எதற்காக என நேரில் சந்தித்து கேட்டு வருகின்றனராம்.
திரையுலகில் பெண் நடிகைகள் மற்றும் துணை நடிகைகள் கடினமாக உழைத்து முன்னேறி வருகின்றனர். ஸ்டார் அந்தஸ்து பெற்ற நடிகைகளின் எண்ணிக்கை குறைவு தான். அதிலும் நன்கு வளர்ந்து வரும் நேரத்தில் குடும்ப சிக்கல் அல்லது வேறு ஏதேனும் பிரச்னைகளால் தற்கொலைக்கு முயற்சிக்கின்றனர். இதுபோன்ற செய்திகள் பலருக்கும் அதிர்ச்சியை தருகிறது. தற்கொலை என்பது தொடர்கதையாகி வருகிறது. நடிகர் சாய் பிரஷாந்த் தொடங்கி VJ சித்ரா வரை இதுபோன்ற அதிர்ச்சிகரமான முடிவுகளை எடுத்த எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே இருக்கிறது.

நடிகை தற்கொலை முயற்சி: இந்நிலையில், சன்டிவி மற்றும் பிரபல தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான சீரியல்களில் நடித்து வந்த நடிகை ஒருவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். கயல் சீரியலில் நடித்து வந்த அமுதா சென்னை சாலிகிராம் பகுதியில் வசித்து வந்துள்ளார். வீட்டிற்குள் இருந்த அவர் என்ன ஆனார் என்பது தெரியவில்லை. அருகில் இருந்தவர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்த போது அதிர்ச்சியடைந்தனர். பாத்ரூம் சுத்தம் செய்ய பயன்படுத்தும் திரவத்தை குடித்து தற்கொலை முயற்சி மேற்கொண்டு இருக்கிறார். பின்னர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மருத்துவர்களும் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவர் ஏன் தற்கொலைக்கு முயன்றார் என்ற காரணம் குறித்து போலீசாரும் தீவிரமாக விசாரித்து வருவதாகக் கூறப்படுகிறது.
கணவருடன் பிரச்னை: 28 வயதான நடிகை அமுதா சாலிகிராமத்தில் கணவருடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில், இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இருவருக்கும் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளால் பேசாமல் இருந்து வந்ததாகவும், இதனால் மன அழுத்தத்திற்கு ஆளான அமுதா ஃபினாயிலை குடித்து தற்கொலைக்கு முயன்தாகக் கூறப்படுகிறது. இதுதான் காரணமா அல்லது வேறு ஏதேனும் பிரச்னையா என்ற கோணத்தில் விருகம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் நடிகையின் குடும்பத்தினர் மருத்துவமனைக்கு வந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











