தற்கொலைக்கு முயன்றதாக வெளியான தகவல்.. கயல் சீரியல் நடிகை வெளியிட்ட வீடியோ.. நடந்தது என்ன?
சென்னை: கயல் சீரியலில் நடித்து வந்த நடிகை அமுதா கணவருடன் ஏற்பட்ட பிரச்னையில் வீட்டில் ஃபினாயிலை குடித்து தற்கொலைக்கு முயன்றதாக செய்திகள் வெளியானது. இதுகுறித்து போலீசாரும் விசாரித்து வந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இதற்கு விளக்கம் அளித்து நடிகை அமுதா வெளியிட்டிருக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதனால், இதில் எது உண்மை என சினிமா ரசிகர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
சின்னத்திரை நடிகர்கள், நடிகைகள் சமீபகாலமாக தற்கொலை நிகழ்வுகள் அதிகரித்து வருவது அதிர்ச்சியை தருகிறது. அதிலும் வெளியே சொல்ல முடியாத சில கசப்பான அனுபவங்களையும் நடிகைகள் பேட்டிகளில் தெரிவித்து அனுதாபங்களை தேடுவதும் உண்டு. சில சர்ச்சையான சம்பவங்களையும் தெரிவித்து பகீரை கிளப்புவார்கள். திரையுலகில் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல பிரச்னைகளை சந்தித்து தனக்கான அங்கீகாரத்தை பெறுவதாகவும் தெரிவிக்கின்றனர். சில நேரங்களில் திரையுலகில் ஃபேமஸ் ஆன நடிகைகள் வயது மூப்பு அல்லது சில சிக்கல்களால் நடிப்புக்கு பிரேக் கொடுத்து குடும்பத்துடன் நேரத்தை செலவழிப்பார்கள். அந்த நேரத்தில் அவர் இறந்துவிட்டதாகவும் வதந்தி செய்திகளும் வெளியாகி அதற்கான விளக்கத்தையும் அளிப்பார்கள். இதுபோன்று பிரபல நடிகர்கள், நடிகைகளுக்கும் நடந்திருக்கிறது.

சின்னத்திரை நடிகை தற்கொலை?: சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கயல் சீரியலை அனைத்து தரப்பு மக்களும் ரசித்து வருகிறார்கள். இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்கள் மக்களின் அன்பையும் பெற்று அந்த கதாப்பாத்திரத்திற்கு உயிர் கொடுத்து வருகிறார்கள். இந்நிலையில், கயல் குடும்பத்தில் ஒருவராக நடித்து வரும் நடிகை அமுதா தற்கொலைக்கு முயன்றதாக நேற்று செய்திகள் வெளியானது. இந்த செய்தி சக நடிகைகளுக்கும் அதிர்ச்சியை தருவதாகவும் தெரிவித்திருந்தனர். கணவருடன் விருகம்பாக்கத்தில் தங்கியிருக்கும் அமுதா குடும்ப பிர்சனை காரணமாக தற்கொலைக்கு முயன்றதாகவும் செய்திகள் வெளியானது. மன அழுத்தத்தில் இருந்ததாகவும் இதனால், ஃபினாயிலை குடித்ததாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், அதற்கு விளக்கம் அளித்து நடிகை அமுதா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அது உண்மையில்லை: தற்கொலைக்கு முயன்றாதக வெளியான செய்திகள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானது என விளக்கம் அளித்திருக்கிறார் அமுதா. இதுகுறித்து அவர் கூறியதாவது, நான் கிராமத்தில் இருக்கிறேன். தற்கொலைக்கு முயன்றதாக வெளியான செய்தி உண்மை இல்லை. Fake. இந்த செய்தியை யாரும் நம்ப வேண்டாம். முற்றிலும் போலியான செய்தி. நான் நலமாக இருக்கிறேன் என விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டிருக்கிறார். இந்த விளக்கத்திற்கு பிறகு அவர் உடல் நலம் குறித்து ரசிகர்கள் நலம் விசாரித்து வருகிறார்கள். மேலும் எப்போது மீண்டும் சீரியலில் காணலாம் எனவும் கேள்வி கேட்க தொடங்கியுள்ளனர். மேலும் ஏன் பொய்யான செய்தியை வெளியிடுகிறார்கள். உண்மை எது என்பதை தெரிந்துகொண்டு செய்தியை பதிவிடுவது நல்லது எனவும் நெட்டிசன்கள் கடிந்து கொண்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











