யாஷிகா ஆர்மி.. இருக்கு கழுகு 2ல உங்களுக்கு தரமான ‘ஒரு சம்பவம்’ இருக்கு!

கழுகு 2 படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார் யாஷிகா.

சென்னை: கழுகு 2 படத்தில் யாஷிகா ஆனந்த் நடனம் ஆடிய பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகங்கள் உருவாகும் சீசன் இது. அந்த வரிசையில் சில வருடங்களுக்கு முன் கிருஷ்ணா, பிந்து மாதவி நடித்து வெற்றி பெற்ற கழுகு படத்தின் இரண்டாம் பாகம் கழுகு-2 என்ற பெயரில் தயாராகிறது.

முதல் பாகத்தில் நடித்த கிருஷ்ணா - பிந்துமாதவி ஜோடியே மீண்டும் இப்படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை கழுகு படத்தை இயக்கிய சத்யசிவா இயக்கி இருக்கிறார்.

இந்த படத்தில் காளிவெங்கட் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, ராஜா பட்டாசார்ஜி ஒளிப்பதிவு செய்ய, கோபிகிருஷ்ணா படத்தொகுப்பை கவனிக்கிறார்.

கிருஷ்ணா:

கிருஷ்ணா:

இந்தப்படத்தை பிரபல விநியோகஸ்தரும் தயாரிப்பாளருமான சிங்காரவேலன் தயாரிக்கிறார். இந்த படத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் மக்களுக்கு இடையூறு செய்யும் ஆபத்தான நாய்களை வேட்டையாடும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் கிருஷ்ணா.

யாஷிகா நடனம் :

யாஷிகா நடனம் :

இந்த படத்தில் இன்னும் ஒரு முக்கியமான சிறப்பம்சமாக, பிக் பாஸ் புகழ் நடிகை யாஷிகா ஆனந்த் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். 'சகலகலா வள்ளி' எனும் இந்தப்பாடல் கிட்டதட்ட 300 நடன கலைஞர்களுடன் பிரமாண்டமான முறையில் படமாக்கப்பட்டுள்ளது. பிரபல நடன இயக்குனர் தீனா இந்த பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார்.

பிக் பாஸ் புகழ்:

பிக் பாஸ் புகழ்:

இருட்டு அறையில் முரட்டு குத்து படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான யாஷிகா ஆனந்த், பிக்பாஸ் சீசன்-2 நிகழ்ச்சி மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் நன்கு அறிமுகமாகியுள்ளார். பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த பின்னர் அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

ஒரு பாடலுக்கு நடனம் :

ஒரு பாடலுக்கு நடனம் :

இந்நிலையில், கழுகு 2 படத்தில் அவரை ஒரு பாடலுக்கு ஆடவைக்க முடிவு செய்து படக்குழு அவரை அணுகியுள்ளது. அவரும் பாடலின் முக்கியத்துவத்தை உணர்ந்து சந்தோஷத்துடன் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார்.

யு சான்றிதழ்:

யு சான்றிதழ்:

கழுகு 2 படத்தின் ஹைலைட்டுகளில் ஒன்றாக இந்த பாடல் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று யாஷிகா நடனம் ஆடிய அந்தப் பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். 'யு' சான்றிதழ் பெற்றுள்ள இந்த படம் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X