கழுகு படத்துக்கு யு ஏ!
வழக்கமாக சென்சாரில் ஏ, யுஏ வழங்குவதாகச் சொன்னால், வேண்டாம் என்று கூறி போராடி 'யு' வாங்குவார்கள்.
ஆனால் சென்சார் 'யு' கொடுத்து, சில காட்சிகளை வெட்டச் சொன்னதால் மறுப்பு தெரிவித்து எனக்கு 'யுஏ'வே இருக்கட்டும். நீங்க சொல்கிற காட்சிகளை வெட்ட முடியாது என்று கூறி இந்த சான்றிதழை கழுகு இயக்குநரும் தயாரிப்பாளரும் பெற்றுள்ளனர்.
"இப்படி யுஏ பெறுவதால் எனக்கு வரிவிலக்கு பாதிப்புதான் என்றாலும் அதற்காக படத்தின் தரமும், காட்சியமைப்பும் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்று போராடி 'யுஏ' வாங்கி"யதாக தயாரிப்பாளர் 'பட்டியல்' சேகர் தெரிவித்தார்.
இந்தப் படத்தில் பட்டியல் சேகர் மகன் கிருஷ்ணா நாயகனாக நடித்துள்ளார். அலிபாபா, கற்றது களவு படங்களில் நடித்துள்ளார். இவரது அண்ணன்தான் இயக்குநர் விஷ்ணுவர்தன்.
பிந்துமாதவி இந்தப் படத்தில் நாயகியாக நடித்துள்ளார். மார்ச் 9-ந் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகிறது கழுகு.


Click it and Unblock the Notifications












