Arulnithi :வெற்றிக் கொண்டாட்டத்தில் கழுவேத்தி மூர்க்கன் டீம்.. அதுக்குள்ளயா?
சென்னை : அருள்நிதி மற்றும் துஷாரா விஜயன் ஆகியோர் லீட் கேரக்டர்களில் நடித்து வெளியாகியுள்ளது கழுவேத்தி மூர்க்கன் படம்.
இந்தப் படம் தமிழகமெங்கும் 310 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிட்டுள்ளது.
படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இந்த வெற்றியை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய கழுவேத்தி மூர்க்கன் டீம் :நடிகர் அருள்நிதி தொடர்ந்து சிறப்பான கதைக்களங்களில் நடித்து வருகிறார். இவரது படங்கள் மினிமம் வெற்றிக்கான கேயாரண்டியுடன் வெளியாகி தயாரிப்பாளர்களுக்கு சிறப்பாக கைகொடுத்து வருகின்றன. அந்த வகையில் இவர் தேர்ந்தெடுக்கும் இயக்குநர்கள், கதைக்களங்கள் ஆகியவை சிறப்பாக அமைந்து விடுகின்றன. தற்போது ஒலிம்பியா பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாகியுள்ள கழுவேத்தி மூர்க்கன் படம் அருள்நிதி நடிப்பில் வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தில் துஷாரா விஜயன், சந்தோஷ் பிரதாப், சாயா தேவி, முனிஷ்காந்த், சரத்லோகித் சாவா ஆகியோர் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை ஜோதிகாவின் ராட்சசி படத்தை இயக்கிய, சை கௌதம ராஜ் இயக்கியுள்ளார். சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த கவினின் டாடா படத்தை தயாரித்த ஒலிம்பியா பிக்சர்சின் எஸ் அம்பேத்குமார், இந்தப் படத்தையும் தயாரித்துள்ளார். படத்தை தமிழகமெங்கும் 310 திரையரங்குகளில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிட்டுள்ளது.

இந்தப் படத்திற்கு தற்போது ரசிகர்கள் மிகச்சிறந்த வரவேற்பை கொடுத்துள்ளனர். இந்த வெற்றியை தற்போது படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இந்த 2023ம் ஆண்டு தங்களது நிறுவனத்திற்கு மிகச்சிறந்த மற்றும் நம்பிக்கைக்குரிய ஆண்டாக அமைந்துள்ளதாக அம்பேத்குமார் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இயக்குநர் கௌதம ராஜின் அசாதாரண உழைப்பிற்கும், ரெட் ஜெயண்டிற்கும் இந்தத் தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுபோன்ற ரசிகர்களின் ரசனைக்கு தீனிபோடும் படங்களை தொடர்ந்து தயாரிக்கவுள்ளதாகவும் அம்பேத்குமார் கூறியுள்ளார். படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ள நிலையில், பாடல்களும் பின்னணி இசையும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த வெற்றிக் கொண்டாட்டத்தில் அருள் நிதி உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டு, கேக் வெட்டி ஒருவருக்கொருவர் ஊட்டிக் கொண்டதை பார்க்க முடிந்தது.

கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ள கழுவேத்தி மூர்க்கன் படம் விமர்சனரீதியாக சிறப்பான பாராட்டுக்களை பெற்றுள்ளது. இந்தப் படம் அழுத்தமான கதைக்களத்தை மிகவும் சிறப்பாக கையாண்டுள்ளதாக இயக்குநர் பா ரஞ்சித்தும் தெரிவித்துள்ளார். மிகவும் சுவாரஸ்யமாக கதையை இயக்குநர் கொண்டு சென்றுள்ளதாகவும் ரசிகர்களுக்கு இந்தப் படம் மிகச்சிறந்த ட்ரீட்டாக இருக்கும் என்றும் அவர் பாராட்டு தெரிவித்திருந்தார்.


Click it and Unblock the Notifications











