ஆக்‌ஷனில் மிரட்ட வரும் ஜான் விக் 4… கீனு ரீவ்ஸ் எடுத்த ரிஸ்க்... சுவாரஸ்யம் பகிர்ந்த இயக்குநர்!

வாஷிங்டன்: ஹாலிவுட்டில் கீனு ரீவ்ஸ் நடித்துள்ள ஜான் விக் 4ம் பாகம் வரும் 24ம் தேதி இந்தியாவில் வெளியாகிறது.

இதுவரை மூன்று பாகங்களாக வெளியாகியுள்ள ஜான் விக், ஹாலிவுட் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து தற்போது வெளியாகவுள்ள ஜான் விக் 4 மீதும் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

இந்நிலையில், இந்தப் படத்தின் சுவாரஸ்யங்கள் குறித்து கீனு ரீவ்ஸ், இயக்குநர் சாட் ஸ்டாஹெல்ஸ்கி இருவரும் பேசியது ட்ரெண்டாகி வருகிறது.

 ஹாலிவுட் ஆக்சன் அசுரன்

ஹாலிவுட் ஆக்சன் அசுரன்

ஹாலிவுட் ரசிகர்களிடம் அதிகம் பிரபலமான படங்களில் முக்கியமானது ஜான் விக். இந்தப் படம் இதுவரை 3 பாகங்களாக வெளியாகி ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றன. அதனைத் தொடர்ந்து தற்போது ஜான் விக் 4ம் பாகமும் வரும் 24ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்திய ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஜான் விக் 4ம் பாகத்தில், கீனு ரீவ்ஸ்ஸின் அதிரடியான ஆக்ஷன் காட்சிகள் சிலிர்க்க வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 சுவாரஸ்யம் பகிர்ந்த கீனு ரீவ்ஸ்

சுவாரஸ்யம் பகிர்ந்த கீனு ரீவ்ஸ்

இந்நிலையில், ஜான் விக் சேப்டர் 4 உருவானது குறித்து கீனு ரீவ்ஸ், இயக்குநர் சாட் ஸ்டாஹெல்ஸ்கி இருவரும் பல சுவாரஸ்யங்களை பகிர்ந்துள்ளனர். ஜான் விக் சீரிஸ்களில் இந்த நான்கவது சேப்டர் தான் ரொம்பவே நீளமானது என இயக்குநர் சாட் தெரிவித்துள்ளார். அதேபோல், முந்தைய 3 பாகங்களிலும் வேடிக்கையான, எதிர்பாராத திருப்பங்கள், பாத்திரங்கள் என, கதைக்களம் நிகழும் உலகை நாங்கள் விரிவாகக் காட்டியுள்ளதாகக் கூறியுள்ளார்.

 புதிய மிரட்டலான ஆக்‌ஷன் சீன்ஸ்

புதிய மிரட்டலான ஆக்‌ஷன் சீன்ஸ்

மேலும், ஜான் விக் சேப்டர் 4ல், கீனு ரீவ்ஸ்க்கு புதிய நவீன ஆயுதங்களை பயன்படுத்தி உருவாகியுள்ள மிரட்டலான ஆக்ஷன் காட்சிகள் உள்ளன. அதுமட்டுமின்றி மஸில் கார்களின் சேஸிங் சீன்ஸ், புதிய அனுபவத்தை கொடுக்கும் என்றுள்ளார். பழிவாங்குவதில் மாஸ் காட்டும் வின்ஸ்டன், இந்த சேப்டரில் எதிர்பாராதவிதமாக ஜான் விக்கை தப்பிக்க வைப்பதில் முக்கியமான ட்விஸ்ட் இருக்கும் எனக் கூறியுள்ளார்.

 புதிய கூட்டணியில் சேப்டர் 4

புதிய கூட்டணியில் சேப்டர் 4

மேலும், இந்த சேப்டரில் ஜானுக்கு அதிக நண்பர்கள் கிடையாது, ஆனால் தியாகத்திற்கு பெயர் பெற்ற ஒரு பிரதர்ஹுட் கேரக்டர் இதில் உள்ளது. ஜான், கெய்ன், ஷிமாஸு ஆகியோர் தி அஸாசின் என்ற ஒரு முக்கோணக் கூட்டணியை உருவாக்குவார்கள். அனைத்திலும் இருந்து விலகியிருந்த கெய்ன், தனது மகளைக் காப்பாற்றுவதற்காக மீண்டும் களத்தில் இறங்குவார். இப்படிப் பல திருப்பங்கள் படத்தில் உள்ளன. கெய்னாக டோனி யென், போவரி கிங்காக லாரன்ஸ் ஃபிஷ்பர்ன், அகிராவாக ரினா சவயமா, வின்ஸ்டனாக இயன் மெக்ஷேன், டிராக்கராக ஷமியர் ஆண்டர்சன், ஷிமாசுவாக ஹிரோயுகி சனாடா, தி ஹார்பிங்கராக க்ளேன்சி பிரவுன் உட்பட பழைய நடிகர்களுடன் சில புதிய கூட்டணியும் இந்தப் படத்தில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 இந்த வயதிலும் இப்படி ஆக்‌ஷன்

இந்த வயதிலும் இப்படி ஆக்‌ஷன்

முக்கியமாக கீனு ரீவ்ஸ் தனது 58வது வயதிலும் ஆக்‌ஷன் காட்சிகளில் அதிக ரிஸ்க் எடுத்து நடித்துள்ளதாக இயக்குநர் கூறியுள்ளார். ஏற்கனவே முந்தைய பாகத்தில், ஒரு வளர்ப்பு நாய்க்காக தன் உயிரையே துச்சமென நினைத்து எதிரிகளை பந்தாடுவார் இந்த ஜான் விக். இந்த சேப்டரில் ஆக்‌ஷன் காட்சிகளில் இன்னும் ரிஸ்க் எடுத்து நடித்துள்ளதாகவும், இது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்ஸாக இருக்கும் எனவும் கூறியுள்ளார். மேலும், காட்சிகள் திருப்தியில்லை என்றால், அதில் சமரசம் செய்துகொள்ளாமல் மீண்டும் மீண்டும் நடித்து கீனு ரீவ்ஸ் தனது வேட்கையை தீர்த்துத் கொண்டதாக தெரிவித்துள்ளார்.

 ரசிகர்கள் எதிர்பார்ப்பு

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

ஆங்கிலம், தமிழ் உட்பட பல மொழிகளில் வெளியாகவுள்ள ஜான் விக் 4 கதை குறித்தும் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஸ்காட் அட்கின்ஸுடன் ஜான் விக் ஒரு இரவு நேர விளையாட்டில் கண்டிப்பாக கலந்துகொள்ள வேண்டும் என நிர்பந்திக்கப்படுகிறார். இரவில் தொடங்கி அதிகாலை நடக்கும் இந்தப் போட்டியில் ஒருவர் மட்டுமே உயிருடன் இருக்க முடியும் என்ற நிபந்தனையும் விதிக்கப்படுகிறது. அதன்பின்னர் என்ன நடக்கிறது என்பது தான் படத்தின் மொத்த கதையும் என சொல்லப்படுகிறது. இதனால், இந்தப் படம் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X