twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விஜய்க்கு கிடைத்த அதே பாக்கியம் 'ரீல் தோனி'யின் படத்திற்கும்: அப்போ ஹிட் தான்

    By Siva
    |

    Recommended Video

    விஜய்க்கு கிடைத்த அதே பாக்கியம் ரீல் தோனி'யின் படத்திற்கும் வீடியோ

    கேதர்நாத்: சுஷாந்த் சிங் ராஜ்புட், சாரா அலி கான் நடித்துள்ள கேதர்நாத் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று மூத்த பாஜக தலைவர் அஜேந்திர அஜய் கோரிக்கை விடுத்துள்ளார்.

    நடிகர் சயிப் அலி கானின் மகள் சாரா ஹீரோயினாக அறிமுகமாகும் படம் கேதர்நாத். அபிஷேக் கபூர் இயக்கியுள்ள இந்த படத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புட் ஜோடியாக நடித்துள்ளார் சாரா.

    கேதர்நாத் படம் வரும் டிசம்பர் மாதம் 7ம் தேதி ரிலீஸாக உள்ளது.

    காதல்

    காதல்

    கேதர்நாத் படம் லவ் ஜிஹாத்தை ஊக்குவிப்பதாக உத்தரகண்ட் மாநில மூத்த பாஜக தலைவர் அஜேந்திர அஜய் தெரிவித்துள்ளார். படத்தில் இந்து பெண்ணான சாரா முஸ்லீம் பையனான சுஷாந்த் சிங்கை காதலிக்கிறார். கேதர்நாத்தில் இந்துவும், முஸ்லீமும் காதலிப்பதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    பாஜக

    பாஜக

    இந்துக்கள் புனித யாத்திரை வரும் கேதர்நாத்தில் தான் ஒரு இந்து பெண்ணும், முஸ்லீம் பையனும் காதலிக்கும் படத்தை எடுக்க வேண்டுமா?. மோசமான இயற்கை சீற்றம் நடந்ததன் பின்னணியில் காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள கேதர்நாத் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று அஜய் சென்சார் போர்டு தலைவர் பிரசூன் ஜோஷிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    அவமதிப்பு

    அவமதிப்பு

    கோடிக்கணக்கான இந்துக்கள் புனித யாத்திரை வரும் கேதர்நாத்தில் இப்படி ஒரு படத்தை எடுத்து அவர்களின் மதத்தை படக்குழு அவமதித்துவிட்டது. ஏன், படத்தில் ஒரு இந்து கதாபாத்திரத்தை ஹீரோவாக போட்டிருக்கலாமே. கேதர்நாத்தை இப்படி காட்டியுள்ளதை பார்த்து புரோகிதர்கள் வருத்தம் அடைந்துள்ளனர் என்கிறார் அஜேந்திர அஜய்.

    போராட்டம்

    போராட்டம்

    கேதர்நாத் படத்திற்கு தடை விதிக்கவில்லை என்றால் உத்தரகண்ட் மாநிலம் முழுவதும் போராட்டம் நடக்கும் என்று அஜய் எச்சரித்துள்ளார். மெர்சல் படத்திற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்ததால் படம் சூப்பர் ஹிட்டானது. அந்த ராசி கேதர்நாத் படத்திற்கும் ஒர்க்அவுட் ஆனால் அதுவும் நிச்சயம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகும்.

    English summary
    Senior BJP leader Ajendra Ajya has written a letter to Central Board of Film Certification Chairman Prasoon Joshi seeking ban on Kedarnath movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X