நயன்தாராவோட நெகட்டிவிட்டியெல்லாம் அவுட் ஆஃப் ஃபோகஸ் ஆகணும்.. விக்னேஷ் சிவனின் புத்தாண்டு போஸ்ட்!
சென்னை: நயன்தாரா நடிப்பில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதமே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட டெஸ்ட் திரைப்படம் சென்ற ஆண்டு வெளியாகவில்லை. நேரடியாக ஓடிடியில் வெளியாகப் போகிறது என்றும் பேச்சுக்கள் அடிபட்டன. ஆனால், இந்த ஆண்டு தியேட்டரில் தான் அந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகை நயன்தாரா, மாதவன் மற்றும் சித்தார்த் நடிப்பில் கிரிக்கெட் படமாக அந்த படம் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு லால் சலாம், ப்ளூ ஸ்டார் மற்றும் லப்பர் பந்து என 3 படங்கள் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி வெளியான நிலையில், லப்பர் பந்து படம் மட்டுமே ஓடியது குறிப்பிடத்தக்கது.

டெஸ்ட் படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், மாதவன் உடன் இணைந்து இந்த புத்தாண்டை துபாயில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் கொண்டாடியுள்ளனர். அதன் வீடியோ வெளியாகி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய நிலையில், தற்போது விக்னேஷ் சிவன் நயன்தாராவுடன் இணைந்து துபாயில் புத்தாண்டு கொண்டாடிய போட்டோ ஒன்றை வெளியிட்டு பக்காவாக கேப்ஷனையும் கொடுத்துள்ளார்.
துபாயில் புத்தாண்டு கொண்டாட்டம்: நடிகை நயன்தாரா சென்ற ஆண்டு அதிகமாக மும்பை, டெல்லி, பெங்களூர் என சுற்றி வந்த நிலையில், அடிக்கடி துபாய்க்கும் சென்று வந்தார். இந்நிலையில், புத்தாண்டையும் இந்த முறை துபாயில் கொண்டாடிய நயன்தாராவின் புகைப்படத்தை அவரது கணவர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
காதல் எங்கே இருக்குமோ அங்கே மகிழ்ச்சி இருக்கும்: விக்னேஷ் சிவன் உலகின் உயரமான கட்டடமான புர்ஜ் கலிஃபா வெளியே நின்றுக் கொண்டு தனது மனைவி நயன்தாராவுடன் ரொமான்டிக் போஸ் கொடுத்து எடுத்த போட்டோவை வெளியிட்டு, காதல் எங்கே இருக்குமோ அங்கே மகிழ்ச்சி இருக்கும் என பதிவிட்டுள்ளார். மேலும், இந்த புதிய ஆண்டில் காதலையும், நல்ல விஷயங்களையும், கடினமான உழைப்பையும் ஃபோகஸ் செய் எனக் கூறியுள்ளார்.
நெகட்டிவிட்டி அவுட் ஆஃப் ஃபோகஸ்: மேலும், நெகட்டிவிட்டியை அவுட் ஆஃப் ஃபோகஸ் செய்து அதை உன் வாழ்வில் இருந்தே ப்ளர் செய்து அகற்றிவிடு என தனது அன்பு மனைவிக்கு புத்தாண்டு வாழ்த்தை சூப்பராக தெரிவித்துள்ளார் விக்னேஷ் சிவன். தனுஷ் விவகாரம் தொடர்பாக நடிகை நயன்தாராவுக்கு எதிராக ஏகப்பட்ட நெகட்டிவிட்டிகள் வலம் வருகின்றன. மேலும், ஆவணப்படத்தில் தனது முன்னாள் காதலர்களான சிம்பு மற்றும் பிரபுதேவா மீது தான் தவறு என்றும் தன்னை ஏமாற்றிவிட்டார்கள் போன்றெல்லாம் அவர் பேசியது அந்த பிரபலங்களின் ரசிகர்களை கடுப்பாக்கியது குறிப்பிடத்தக்கது.
8 படங்கள்: இந்த ஆண்டு லேடி சூப்பர் ஸ்டார் நிச்சயம் கம்பேக் கொடுப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. டெஸ்ட், மண்ணாங்கட்டி, ராக்காயி, கிஸ், டாக்ஸிக், மூக்குத்தி அம்மன் 2 என சுமார் 8 படங்கள் அவர் கைவசம் உள்ளதாக கூறுகின்றனர். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், க்ரித்தி ஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா, சீமான் நடித்துள்ள லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படமும் இந்த ஆண்டு சம்மருக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விக்னேஷ் சிவன் அந்த படத்தை முடித்துவிட்டு அடுத்து ஒரு படத்தையும் இந்த ஆண்டுக்குள் ஆரம்பிப்பார் எனக் கூறுகின்றனர். புத்தாண்டு கொண்டாட்டத்தில் குழந்தைகளை காணவில்லையே என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











