அமைதியா இருங்க... நம்பிக்கையோட இருங்க... என்ன சமந்தா இப்படி இறங்கிட்டாங்க!
ஐதராபாத் : பிசியான நடிகையாக வலம்வந்து கொண்டிருக்கும் சமந்தா அக்கினேனி சமூக வலைதளங்களிலும் பரபரப்பாக இயங்கி வருகிறார்.
Recommended Video
கொரோனா குறித்தும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்.
இவரது நடிப்பில் தி பேமிலி மேன் 2 வெப் சீரீஸ் வரும் ஜூன் 4ம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ், தெலுங்கில் பிசி
சமந்தா அக்கினேனி தொடர்ந்து தமிழ், தெலுங்கு என பிசியான நடிகையாக வலம்வந்து கொண்டிருக்கிறார். தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாராவுடன் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் தற்போது அவர் நடித்து வருகிறார். தொடர்ந்து தெலுங்கிலும் சில படங்களில் நடித்து வருகிறார்.

வெப் சீரிசில் சமந்தா
இந்நிலையில் தி பேமிலி மேன் 2 என்ற வெப் சீரிசிலும் சமந்தா நடித்துள்ளார். வரும் ஜூன் 4ம் தேதி வெளியாகவுள்ள இந்த தொடரின் ட்ரெயிலர் இரு தினங்களுக்கு முன்பு வெளியாகி ஒரே நேரத்தில் வரவேற்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழர்களுக்கு எதிராக இந்த சீரிஸ் உருவாக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தொடர் விழிப்புணர்வு பதிவுகள்
இதனிடையே, ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட தளங்களிலும் சமந்தா பரபரப்பாக செய்லபட்டு வருகிறார். இந்த கொரோனா சமயத்தில் அதுகுறித்த விழிப்புணர்வு பதிவுகளையும் அவர் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். பல்வேறு தளங்களிலும் செயல்பட்டு வருகிறார்.
— Samantha Akkineni (Samanthaprabhu2) May 21, 2021
நம்பிக்கையுடன் இருங்கள்
இந்நிலையில் இந்த கொரோனா சமயத்தில் அமைதியாக இருங்கள் மற்றும் நம்பிக்கையுடன் இருங்கள் என்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் மார்ட்டின் லூதர் கிங்கின் முழு பாதையும் தென்படாவிட்டாலும் முதல் அடியை எடுத்து வைப்பதற்கு நம்பிக்கையே முக்கியம் என்ற வாசகத்தையும் பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











