எப்பவுமே பீஸ்ட் மோடுலயே இருங்க விஜய் சார்.. தளபதிக்கு தரமான பிறந்தநாள் வாழ்த்துக் கூறிய தனுஷ்!

சென்னை: 47வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நடிகர் விஜய்க்கு நடிகர் தனுஷ் தரமான பிறந்தநாள் வாழ்த்துக் கூறியுள்ளார்.

Recommended Video

Thalapathy Vijay Unknown : Anirudhயை கலாய்க்கும் Thalapathy | #HBDTHALAPATHYVIJAY

கோலிவுட்டின் பாக்ஸ் ஆஃபிஸ் கிங்காக இருக்கும் நடிகர் விஜய்யின் 47வது பிறந்தநாளை இன்று அவரது ரசிகர்கள் வெல்ஃபேர் டேவாக கொண்டாடி வருகின்றனர்.

தென்னிந்திய திரையுலகை சேர்ந்த பல பிரபலங்களும் நடிகர் விஜய்யின் பிறந்தநாளுக்கு தொடர்ந்து சமூக வலை தளங்கள் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

47வது பிறந்தநாள்

47வது பிறந்தநாள்

1974ம் ஆண்டு ஜூன் 22ம் தேதி இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் பாடகி சோபனாவுக்கு மகனாக பிறந்தார் விஜய். பத்து வயதிலேயே விஜயகாந்தின் வெற்றி படத்தில் நடிக்க ஆரம்பித்த நடிகர் விஜய், இளைய தளபதி, தளபதி என ரசிகர்கள் மனதில் மிகப்பெரிய சிம்மாசனத்தையே போட்டு உட்கார்ந்திருக்கிறார். நடிகர் விஜய்யின் 47வது பிறந்தநாளை வழக்கம் போல அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

வாழ்த்து மழை

வாழ்த்து மழை

ரசிகர்கள் மட்டுமின்றி தென்னிந்திய திரை பிரபலங்கள் பலரும் நடிகர் விஜய்யின் 47வது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர். நடிகர் விஜய்யுடன் இணைந்து நடித்த நடிகை காஜல் அகர்வால் உள்ளிட்ட ஏராளமான நடிகைகளும் நடிகர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து பீஸ்ட் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக்கையும் ஷேர் செய்து வருகின்றனர்.

தனுஷ் வாழ்த்து

தனுஷ் வாழ்த்து

ஹாலிவுட்டில் தி கிரேமேன் ஷூட்டிங்கில் இருந்து வரும் நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது நடிகர் விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறியுள்ளார். மேலும், தளபதி விஜய்யின் 65வது படமான பீஸ்ட் படத்தை வைத்து நடிகர் விஜய்யை ஸ்பெஷலாக வாழ்த்தி உள்ளது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

பீஸ்ட் மோடு

பீஸ்ட் மோடு

"Happy birthday dear actorvijay sir. Keep the BEAST mode on and keep rocking" என எப்பவுமே இதே பீஸ்ட் மோடுலயே இருங்க என தரமாக வாழ்த்தி உள்ளார். நடிகர் தனுஷின் வாழ்த்தை தொடர்ந்து தளபதி ரசிகர்கள் தனுஷுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X