இவ்ளோ தானா, இன்னும் இருக்கா, நல்லா கலாய்ங்க: கேட்டு வாங்கும் நடிகை
மும்பை: தன்னை கிண்டல் செய்பவர்கள் நன்றாக கிண்டலடிக்கட்டும். அதை பற்றி கவலை இல்லை என்று நடிகை ஷில்பா ஷிண்டே தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர் ஷில்பா ஷிண்டே. தொலைக்காட்சி தொடர்களை தயாரிப்பவர் ஒருவர் மீது பாலியல் புகார் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியவர் ஷில்பா.
தற்போது ஷில்பா பாலிவுட்டில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார்.

குத்தாட்டம்
பாலிவுட்டில் குச்சி, குச்சியாக இருக்கும் நடிகைகளுக்கு மத்தியில் ஷில்பா டான்ஸ் ஆடியதை பார்த்த ரசிகர்கள் இவ்ளோ குண்டாக இருந்துகிட்டு இது தேவையா என்று சமூக வலைதளங்களில் மரண கலாய் கலாய்த்தனர்.
ஷில்பா
மாரோ லைன் குத்துப் பாடலுக்கு ஆடியபோது நான் குண்டாக இருந்தது எனக்கே தெரியும். அந்த பாடலுக்கு ஆட என்னை தேர்வு செய்தபோதும் நான் குண்டாகவே இருந்தேன் என்கிறார் ஷில்பா.

குண்டு
அந்த பாடலுக்கு ஆடிய பிறகு நாந் 6 முதல் 7 கிலோ வரை எடையை குறைத்துவிட்டேன். தற்போது எதற்காக என் வெயிட் பற்றி இவ்வளவு பிரச்சனை? எனக்கு பிடித்து தான் ஆடினேன் என்று ஷில்பா தெரிவித்துள்ளார்.

கலாய்
குத்துப் பாடலுக்கு நான் ஆடியதை பார்த்து மக்கள் கலாய்த்தால் கலாய்க்கட்டும். அதை பற்றி எனக்கு கவலை இல்லை. நான் அந்த பாடலில் ஆபாசமாக ஆடவில்லை என்று ஷில்பா கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











