அவர் கூட ஒர்க் பண்றது ரொம்ப சூப்பரா இருக்கு.. மீண்டும் அந்த மாஸ் ஹீரோவுடன் இணையும் கீர்த்தி சுரேஷ்!

ஹைதராபாத்: நடிகை கீர்த்தி சுரேஷ் மீண்டும் அந்த மாஸ் ஹீரோவுடன் இணைந்து நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Recommended Video

Annathe Release Date Announced | Nasser Kabadadhari Dubbing, Master Post Production Starts

ரஜினி முருகன், ரெமோ, பைரவா, சர்கார் என தமிழில் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

டோலிவுட்டில் நாக் அஷ்வின் இயக்கத்தில் வெளியான மகாநடி படத்திற்காக தேசிய விருது வாங்கிய பின்னர் அங்கும் முன்னணி ஹீரோயினாக மாறியுள்ளார்.

சூப்பர்ஸ்டார் நடிகர்கள்

சூப்பர்ஸ்டார் நடிகர்கள்

சிவகார்த்திகேயன், விஜய், சூர்யா, விக்ரம் என தமிழ் சினிமாவில் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ள நடிகை கீர்த்தி சுரேஷ், மலையாளத்தில் மோகன் லால் மற்றும் தமிழில் ரஜினிகாந்த் என சூப்பர் ஸ்டார் நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். ரஜினியுடன் கீர்த்தி நடித்து வரும் அண்ணாத்த படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகிறது.

இவர் படமும்

இவர் படமும்

கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் தமிழில் உருவாகி உள்ள பெண்குயின் படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய அந்த படத்தின் தயாரிப்பு தரப்பு முடிவு செய்துள்ளது. ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படத்தைத் தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் கர்ப்பிணி பெண்ணாக நடித்துள்ள அந்த படமும் நேரடியாக ஆன்லைனில் வெளியாகப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நிதினுடன்

நிதினுடன்

டோலிவுட்டின் இளம் மாஸ் ஹீரோ நிதின் உடன் நடிகை கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்துள்ள ரங் தே படமும் ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது. ஏற்கனவே மிஸ் இந்தியா படமும் டோலிவுட்டில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி உள்ள நிலையில், அடுத்ததாக நிதினுடன் இன்னொரு படத்திலும் ஜோடி சேர கீர்த்தி சுரேஷ் முடிவு செய்துள்ளாராம்.

மீண்டும் அவருடன்

மீண்டும் அவருடன்

இந்நிலையில், கிருஷ்ண சைத்தன்யா இயக்கத்தில் நிதின் நடிக்கவுள்ள பவர் பேட்ட படத்திலும், அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கப் போவதாக தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. ஆனால், இதுவரை இது குறித்த எந்தவொரு அதிகாரப் பூர்வ தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X