அசால்ட்டா பாம்பை பிடித்து விளையாடும் அருண் பாண்டியன் மகள்.. வைரலாகும் கீர்த்தி பாண்டியன் வீடியோ!

சென்னை: தமிழ் சினிமாவில் 90 - களின் முன்னணி ஹீரோவாக வலம் வந்தவர் அருண் பாண்டியன். நடிகர், தயாரிப்பாளர், வினியோகஸ்தர் என முப்பரிமாணத்தில் தன்னை நிலைநிறுத்திக்கொண்டவர்.

இவரின் மகள் கீர்த்தி பாண்டியன். இவர் கடந்த வருடம் வெளியான தும்பா படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். இந்நிலையில் தற்போது இவர், தனி ஆளாக பாம்பை பிடித்து காட்டிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

எத்தனை படங்கள் ?

எத்தனை படங்கள் ?

மூத்த நடிகரும், தயாரிப்பாளருமான அருண் பாண்டியனின் மகள் தான் இளம் நடிகை கீர்த்தி பாண்டியன். 'கனா' படத்தின் மூலம் அறிமுகமான தர்ஷனுக்கு ஜோடியாக 2019 ஆம் ஆண்டு வெளியான 'தும்பா' படத்தில் தமிழில் அறிமுகமானார். தற்போது அவர் 'இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா','காஷ்மோரா' போன்ற படங்களை இயக்கிய டைரக்டர் கோகுல் இயக்கத்தில் மலையாளத்தில் சூப்பர் ஹிட் படமான 'ஹெலன்' படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார்.

பண்ணை வீட்டில்

பண்ணை வீட்டில்

தற்போது லாக்டவுன் டைம் என்பதால், கீர்த்தி பாண்டியன் தனது பண்ணை வீட்டில் வசித்து பொழுதை களித்து வருகிறார். ஏற்கனவே அவர் பயிர்களை நடுவது , டிராக்டர் ஓட்டுவது என கெத்துக் காட்டும் வீடியோ மற்றும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வைரலாக்கி உள்ளார். இந்நிலையில் நடிகை கீர்த்தி பாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மேலும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

பாம்பு வீடியோ

பாம்பு வீடியோ

அந்த வீடியோவில், தனது பண்ணை வீட்டுக்குள் புகுந்த பாம்பு ஒன்றை, அவர் இலாவகமாக பிடித்து, ஒரு பக்கெட்டில் போட்டு, அதை வெளியில் எடுத்து சென்று விடும் முழு வீடியோவை அவர் பகிர்ந்துள்ளார். கீர்த்தி பாண்டியனின் தைரியத்தை நெட்டிசன்ஸ் பாராட்டி வருவதுடன், இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

செம தில்லு

செம தில்லு

பல்லி, கரப்பான் பூச்சி பார்த்து பயப்படும் ஹீரோயின்களுக்கு மத்தியில், கீர்த்தி பாண்டியன் செய்த இந்த செயல் நெட்டிசன்ஸ்களின் பாராட்டை பெற்றுள்ளது. தமிழ் சினிமாவில் பாம்பைப் பிடிக்கும் ஒரு ஹீரோயின் இருப்பது ஆச்சரியம்தானே. யாரங்கே, கீர்த்தி பாண்டியனுக்கு உடனே ஒரு ஆக்ஷன் கதை ரெடி செய்யுங்கள். அவர் அப்பாவே தயாரித்தும் விடுவார், என்றும் நெட்டிசன்ஸ் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X