எனக்கு கிடைத்த பொக்கிஷம்... கணவருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன கீர்த்தி பாண்டியன்!
சென்னை: நடிகை கீர்த்தி பாண்டியன் தனது காதல் கணவருக்கு கவிதை நடையில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இயக்குநரும், நடிகருமான அருண்பாண்டியனின் மகளான கீர்த்தி பாண்டியன் தும்பா என்கிற திரைப்படத்தில் நடித்து திரைத்துறையில் நுழைந்தார்.
இதைத்தொடர்ந்து அன்பிற்கினியாள் என்கிற படத்தில் அப்பா அருண்பாண்டியனுடன் சேர்ந்து நடித்திருந்தார். இப்படத்திற்கு ஓரளவு வரவேற்பு கிடைத்தது.

புளூ ஸ்டார்: நடிகை கீர்த்தி பாண்டியன் தற்போது இயக்குநர் பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குநராக இருந்த எஸ்.ஜெயக்குமார் இயக்கத்தில் நீலம் புரோடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் புளூ ஸ்டார் என்கிற படத்தில் நடித்து வருகிறார். கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி உருவாகி வரும் இப்படத்தில், அசோக் செல்வன், சாந்தனு நடித்துள்ளனர். இப்படத்தில் நடித்த போது தான் கீர்த்தி பாண்டியனுக்கும் அசோக் செல்வனுக்கும் காதல் மலர்ந்தது.
காதல் திருமணம்: இருவரும் தங்களது காதலை முறைப்படி பெற்றோரிடம் சொல்ல பெற்றோரின் சம்மதத்துடன் செப்டம்பர் 13ந் தேதி, அருண்பாண்டியனின் பண்ணை வீட்டில் திருமணம் மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றது. இந்த திருமணத்தில் மிகவும் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
ஹனிமூன் புகைப்படம்: வெளிநாட்டில் ஹனிமூனை கொண்டாடி வரும் இவர்கள், முதல் முதலாக தங்களது ஹனிமூன் புகைப்படத்தை வெளியிட்டு, இன்று பிறந்தநாள் கொண்டாடும் அசோக் செல்வனுக்கு அழகான வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தப் போட்டோவில் கீர்த்தி பாண்டியன் அசோக் செல்வனை அணைத்தபடி இருவரும் புன்னகையுடன் இருக்கின்றனர்.
என் பொக்கிஷம்: அதற்கு கேப்ஷனாக, நீங்கள் தான் எனக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம். உங்கள் அன்பும் மகிழ்ச்சியும் நம்மை சுற்றி உள்ள இயற்கையிலும் சிறந்ததை வெளிப்படுத்துகிறது. உங்கள் பெரிய இதயத்திற்கு நீங்கள் எல்லாவற்றையும் மிகுதியாக பெறுவீர்கள்... என் அன்பான மந்திரவாதி, I love you என பதிவிட்டுள்ளார்.
குவியும் படவாய்ப்பு: சூது கவ்வும் படத்தின் மூலம் அறிமுகமானவர் அசோக் செல்வன், தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருக்கிறார். அண்மையில் இவர் நடிப்பில் வெளியான போர்த்தொழில் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று வசூலை அள்ளியது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இவருக்கு படவாய்ப்பு குவிந்து வருகிறது.


Click it and Unblock the Notifications











