அப்பா நல்லா குணமாகிட்டாரு.. நம்பிக்கையுடன் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட கீர்த்தி பாண்டியன்!

சென்னை: அன்பிற்கினியாள் படத்தின் மூலம் நடிகையான கீர்த்தி பாண்டியன் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்.

பிரபல தமிழ் சினிமா நடிகர் அருண் பாண்டியனின் மகளான கீர்த்தி பாண்டியன் கொரோனா தடுப்பூசி மீது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்றும் அதன் காரணமாக அதனை செலுத்திக் கொண்டேன் என்றும் தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ளார்.

சமீபத்தில் நடிகர் அருண் பாண்டியன் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட அனுபவத்தையும் கீர்த்தி பாண்டியன் வெளியிட்டு இருந்தார்.

அருண் பாண்டியன் மகள்

அருண் பாண்டியன் மகள்

நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத் தன்மை கொண்ட அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன். மலையாளத்தில் வெளியான ஹெலன் படத்தின் தமிழ் ரீமேக்கான அன்பிற்கினியாள் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். நீண்ட வருடங்களுக்கு பிறகு மீண்டும் தனது மகளுடன் இணைந்து நடித்திருந்தார் அருண் பாண்டியன்.

அப்பாவுக்கு கொரோனா

அப்பாவுக்கு கொரோனா

சமீபத்தில் நடிகை கீர்த்தி பாண்டியன் தனது சமூக வலைதள பக்கங்களில் தனது அப்பா அருண் பாண்டியன் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அவருக்கு கொரோனா பாசிட்டிவ் என பரிசோதனையில் வந்த நிலையில், மருத்துவர்கள் கொடுத்த சிகிச்சையின் பலனாக தற்போது நலமுடன் உள்ளார் என்று பதிவிட்டு இருந்தார்.

கொரோனா தடுப்பூசி

கொரோனா தடுப்பூசி

62 வயதாகும் நடிகர் அருண் பாண்டியன் கடந்த மாதம் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக் கொண்டார். அதன் பின்னரே அவருக்கு இது போன்ற பாதிப்புகள் ஏற்பட ஆரம்பத்தில் ரொம்ப பயந்ததாகவும், ஆனால், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதன் காரணமாகவே பெரிய பாதிப்புகள் ஏற்படாமல் அவர் நலமுடன் திரும்பினார் என்றும் பதிவிட்டு கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளார் கீர்த்தி பாண்டியன்.

நம்பிக்கை உடன்

நம்பிக்கை உடன்

கொரோனா பாதிப்பில் இருந்து அப்பா நலமுடன் வீட்டிற்கு திரும்பிய நிலையில், கொரோனா தடுப்பூசி தொடர்பான சந்தேகங்கள் எல்லாம் நீங்கி, நம்பிக்கை உண்டாகி உள்ளது என்று பதிவிட்டுள்ள கீர்த்தி பாண்டியன், தானும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

மக்களுக்கு வேண்டுகோள்

மக்களுக்கு வேண்டுகோள்

கொரோனா தடுப்பூசியால் சிலருக்கு பக்க விளைவுகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. அதனால், மருத்துவரை அணுகி உங்களின் உடல் நிலை பற்றி முழுமையாக தெரிவித்து, அனைத்து சந்தேகங்களையும் தீர்த்துக் கொண்டு கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ளுங்கள். இந்த போரை அனைவரும் ஒன்றிணைந்தே வெல்ல வேண்டும் என மக்களிடத்தில் கோரிக்கை வைத்துள்ளார் கீர்த்தி பாண்டியன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X