Keerthi Pandian: “கல்யாணம் ஆகிட்டா அதெல்லாம் கூடாதா..” மீண்டும் கண்ணகியாக மாறின கீர்த்தி பாண்டியன்!

சென்னை: கீர்த்தி பாண்டியன் நடித்துள்ள கண்ணகி திரைப்படம் இன்று வெளியாகிறது. அசோக் செல்வனை திருமணம் செய்துள்ள கீர்த்தி பாண்டியன், தனது சினிமா கேரியர் குறித்து மீண்டும் ஒருமுறை கண்ணகியாக மாறி பதிலடி கொடுத்துள்ளார்.

மீண்டும் கண்ணகியாக மாறிய கீர்த்தி பாண்டியன்
நடிகர் அருண் பாண்டியனின் மகளான கீர்த்தி பாண்டியன், தும்பா திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமாகினார். தொடர்ந்து அன்பிற்கினியாள் என்ற படத்திலும் நாயகியாக நடித்திருந்தார். இதனிடையே ப்ளூ ஸ்டார் படத்தில் நடித்த போது அசோக் செல்வனுடன் காதல் ஏற்பட்டதை தொடர்ந்து, இருவரும் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர்.

Keerthi Pandian: Keerthi Pandian explains that she will continue to act even if she is married

இந்நிலையில் கீர்த்தி பாண்டியன் நடித்துள்ள கண்ணகி திரைப்படம் இன்று வெளியாகிறது. அதேநேரம் இன்று ரிலீஸாகவிருந்த அசோக் செல்வனின் சபா நாயகன் படம், அடுத்த வாரம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. கண்ணகி படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சிகளில் கீர்த்தி பாண்டியன் தொடர்ந்து பங்கேற்று வந்தார். அப்போது பயில்வான் ரங்கநாதனை கீர்த்தி பாண்டியன் வெளுத்துவிட்ட சம்பவம் வைரலானது.

அதாவது கண்ணகி பட செய்தியாளர்கள் சந்திப்பில், "வீட்டில் தான் இருவரும் சண்டை போடுறீங்கனா, ஒரே தேதியில் உங்கள் படங்களை ரிலீஸ் செய்து அங்கேயும் சண்டையா என நக்கலாக கேட்டார். அதனைக் கேட்ட கீர்த்தி பாண்டியன், என் வீட்டுக்கு வந்து நீ பார்த்தியா, எங்க இருவருக்கும் எப்போ சண்டை வந்தது என பயில்வான் ரங்கநாதனை சம்பவ இடத்தில் வைத்தே சம்பவம் செய்தார்.

இப்போது அதேபோல் இன்னொரு நிகழ்ச்சியில், திருமணம் ஆகிவிட்டதால் இனி தொடர்ந்து நடிப்பீர்களா என கீர்த்தி பாண்டியனிடம் கேட்கப்பட்டது. இதற்கும் கீர்த்தி பாண்டியன் செம்ம ஷார்ப்பாக பதில் கொடுத்து நிகழ்ச்சித் தொகுப்பாளரை பங்கம் செய்துள்ளார். நடிப்பும் ஒரு தொழில் தானே, இத மட்டும் கல்யாணம் ஆகிட்டா செய்யக் கூடாதா... திருமணம் ஆன பின்னரும் தொடர்ந்து நடித்தால் என்ன பிரச்சினை என விளாசி எடுத்துள்ளார்.

மேலும், இதே கேள்வியை அசோக் செல்வனிடம் கேட்க முடியுமா. ஆண்கள் திருமணம் செய்துவிட்டு நடிக்கலாம், ஆனால், நடிகைகளுக்கு மட்டும் இதில் என்ன பிரச்சினை இருப்பதாக பார்க்குறீங்க என கேள்வி மேல் கேட்டு கண்ணகியாக மாறிவிட்டார். இந்த வீடியோவை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து கீர்த்தி பாண்டியனை பாராட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X