வாய்க்குள் நெருப்பை விட்டு விளையாடும் வாரிசு நடிகை.. நீங்கதான் ஃபயர் பேபி என கொண்டாடும் ரசிகர்கள்!
சென்னை: அப்பாவுக்கு பொண்ணு தப்பாமல் பிறந்திருக்கிறாள் என நடிகை கீர்த்தி பாண்டியனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
ஆக்ஷன் ஹீரோவான அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியனுக்கு பயம் என்றால் என்னவென்றே தெரியாது என்பதை போல நெருப்பை வாய்க்குள் விட்டு விளையாடும் வீடியோவை ஷேர் செய்து வைரலாக்கி உள்ளார்.
சமீபத்தில் பிகினி புகைப்படங்களை போட்டு இணையத்தை திணறவிட்ட அன்பிற்கினியாள் ஹீரோயினின் அடுத்த அதிரடி ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது.

அருண் பாண்டியன் மகள்
ஊமை விழிகள், இணைந்த கைகள் என 80ஸ் கிட்களின் ஆக்ஷன் ஹீரோவாக அசத்தி வந்த நடிகர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் அன்பிற்கினியாள் படத்தின் மூலம் கோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமானார். இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து ஆக்டிவாக செயல்பட்டு வரும் அவர் பதிவிடும் பதிவுகள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன.

அன்பிற்கினியாள்
மலையாளத்தில் ஹெலன் என வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்த திரைப்படத்தை தமிழில் அன்பிற்கினியாள் என ரீமேக் செய்து மகளை ஹீரோயினாக அறிமுகப்படுத்தினார் அப்பா அருண் பாண்டியன். இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா படங்களை இயக்கிய இயக்குநர் கோகுல் இயக்கத்தில் வெளியான அந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

கண்ணகி
அன்பிற்கினியாள் வெற்றியை தொடர்ந்து கண்ணகி எனும் வித்தியாசமான படத்தில் நடித்து வருகிறார் கீர்த்தி பாண்டியன். ரொம்பவே போல்டான கீர்த்தி பாண்டியனின் கண்ணகி ஃபர்ஸ்ட் லுக் புகைப்படம் வெளியாகி ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. தொப்புள் கொடிக்கு தீ வைப்பது போல அந்த போஸ்டர் உருவாக்கப்பட்டு இருந்தது.

இலங்கையில் சுற்றுலா
ஆண்டு இறுதியை இலங்கையில் கொண்டாடி வரும் நடிகை கீர்த்தி பாண்டியன் சமீபத்தில் நீச்சல் குளத்தில் பிகினி உடையில் படு போல்டாக வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தின் சூட்டை அதிகரித்தது. பீச் பிரியையான இவர் ஏகப்பட்ட கடற்கரை புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

வாய்க்குள் நெருப்பு
இந்நிலையில், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாய்க்குள் ஒரு நெருப்பு எரியும் குச்சியை விட்டு திகிலூட்டும் வீடியோவை நடிகை கீர்த்தி பாண்டியன் ஷேர் செய்து ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார். மேலும், ஜிவி பிரகாஷ் இசையில் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் மியூசிக்கை போட்டு கைகளிலும் நெருப்பால் தடவிக் கொடுக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

ஃபயர் பேபி
நடிகை கீர்த்தி பாண்டியன் இப்படி நெருப்புடன் விளையாடும் வீடியோவை ஷேர் செய்ததை பார்த்த ரசிகர்கள் நிஜமாகவே நீங்க தான் ஃபயர் பேபி என கமெண்ட் பக்கத்தில் ஃபயர் எமோஜிக்களை போட்டு தெறிக்க விட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











