அன்பிற்கினியாள் ரிலீஸ் தேதி அறிவிப்பு... எப்போன்னு தெரியுமா?
சென்னை : நடிகர் அருண்பாண்டியன் மகள் கீர்த்தி பாண்டியன் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதையில் நடித்திருக்கும் திரைப்படம் அன்பிற்கினியாள்.
அன்பிற்கினியாள் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தை இயக்குனர் கோகுல் இயக்கி உள்ளார்.
வித்தியாசமான போஸ்டர்கள் எதிர்பார்ப்பை உண்டாக்கக்கூடிய டிரைலர் என அசத்தி வரும் படக்குழு இப்போது அதன் ரிலீஸ் தேதியையும் அறிவித்துள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியைக் கூட்டியுள்ளது.

நாயகிக்கு முக்கியத்துவம்
நாயகிக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படங்கள் சமீப காலமாகவே தமிழ் சினிமாவிலும் வெளியாகி வெற்றியும் பெற்று வருகிறது. இதுவரை முன்னணி கதாநாயகிகள் மட்டுமே இதுபோன்ற கதையில் நடித்து வந்த நிலையில் இப்போது இளம் கதாநாயகி நடிகை கீர்த்தி பாண்டியன் நாயகிக்கு முக்கியத்துவம் தரும் அன்பிற்கினியாள் படத்தில் நடித்துள்ளார்.

அன்பிற்கினியாள்
மலையாளத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு ஹெலன் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றதோடு இந்த படம் தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து. மேலும் தமிழில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக அப்போதே செய்திகள் வெளியாகி இருந்தன. அந்த வகையில் விஜய் சேதுபதியின் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தை இயக்கிய கோகுல் இந்தப் படத்தை இயக்கியுள்ளார் . அன்பிற்கினியாள் என அற்புதமான டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

தந்தை மகள் பாசம்
இதுவரை நிஜத்தில் மட்டுமே அப்பா மகளாக இருந்து வந்த அருண் பாண்டியன் மற்றும் கீர்த்தி பாண்டியன் இந்த திரைப்படத்தில் முதன் முறையாக இணைந்து நடித்திருக்க, இருவரையும் ஒன்றாக திரையில் காண ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். கடந்த வாரம் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி தூள் கிளப்பியது. அதில் தந்தை மகள் பாசம்,காதல், தவிப்பு, போராட்டம் என அனைத்தும் கலந்திருக்க டிரைலர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

மார்ச் 5
இந்நிலையில் அன்பிற்கினியாள் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது படக்குழு. இதுவரை கலகலப்பான திரைப்படங்களை இயக்கி வெற்றியும் பெற்று வந்த கோகுல், நடிகர் தயாரிப்பாளர் என பன்முகங்கள் கொண்டுள்ள அருண்பாண்டியன் மற்றும் அவரது மகள் கீர்த்தி முதல் முறையாக இணைந்து நடித்திருக்கும் அன்பிற்கினியாள் படம் வரும் மார்ச் 5-ஆம் தேதி வெளியாகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











