வாங்களேன் புல்லட்ல ஒரு ரைடு போயிட்டு வருவோம்... புல்லட்டில் கெத்தாக ஊர் சுற்றிய கீர்த்தி பாண்டியன்!
சென்னை : நடிகர் அருண்பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் இப்பொழுது படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
கானா வெற்றியை தொடர்ந்து நடிகர் தர்ஷன் ஹீரோவாக நடித்திருந்த இப்படத்தில் நடித்து கீர்த்தி பாண்டியன் அறிமுகமானார்.
சமீபத்தில் வெளியான அன்பிற்கினியாள் படத்தில் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெற்ற கீர்த்தி பாண்டியன் இப்பொழுது கெத்தாக புல்லட்டில் ஊர்சுற்றி வரும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அறிமுகமானார்
பாடகர், நடிகர்,இயக்குனர் என பல முகங்களைக் கொண்ட அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் வெளியான கானா திரைப்படத்தில் நடித்து ஹீரோவாக அறிமுகமான தர்ஷன் நடிப்பில் வெளியான தும்பா படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகை கீர்த்தி பாண்டியன். இவர் பிரபல நடிகர் அருண் பாண்டியனின் மகள் ஆவார்.

அன்பிற்கினியாள்
முழுக்க முழுக்க காடுகளில் எடுக்கப்பட்ட தும்பா எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பைப் பெறவில்லை. இந்த நிலையில் மலையாளத்தில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற ஹெலன் தமிழில் ரீமேக் அன்பிற்கினியாள் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா,ரெளத்திரம், ஜூங்கா உள்ளிட்ட படங்களை இயக்கிய கோகுல் இப்படத்தை இயக்கிய இருக்க இதில் கீர்த்தி பாண்டியன் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி பிரமாதப்படுத்தி இருந்தார்.

நடிப்புக்கு தீனி
அன்பிற்கினியாள் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதை என்பதால் கீர்த்தி பாண்டியனின் நடிப்புக்கு செமயாக தீனி போட்டது. இந்த நிலையில் அடுத்தடுத்த படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் கிளாமர் போட்டோ ஷூட் புகைப்படங்களையும் கீர்த்தி பாண்டியன் வெளியிட்டு இணையதளத்தை கலக்கி வருகிறார்.
Recommended Video

கூல் ட்ரிப்
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை ஆனால் கீர்த்தியை கையிலேயே பிடிக்க முடியாது அந்த அளவிற்கு புல்லட்டில் எங்கேயாவது பயணம் செய்வதை மிகவும் விரும்புவார். அந்த வகையில் நேற்று ஈசிஆர் சாலை முழுவதும் புல்லட்டில் ஊர் சுற்றி உள்ளார். கிழிந்த பேண்ட் கெத்தான புல்லட் கலர் ஃபுல்லான கூலிங் கிளாஸ் என கீர்த்தி பாண்டியன் வெளியிட்டுள்ள இந்த கூல் ட்ரிப் புகைப்படங்கள் இணையதளத்தை கலக்கிக்கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications











