அதிர்ச்சி.. குடிக்க தண்ணிக் கூட கிடைக்கல.. மயிலாப்பூரில் அவதிப்படும் அசோக் செல்வன் மனைவி!
சென்னை: மயிலாப்பூர் பகுதியில் 2015ம் ஆண்டு கூட சொட்டுத் தண்ணீர் நிக்கல, ஆனால், தற்போது தரை தளமே மூழ்கி உள்ளது என நடிகர் அசோக் செல்வனின் மனைவியும் நடிகையுமான கீர்த்தி பாண்டியன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
சாமானிய மக்கள் மட்டுமின்றி பிரபலங்களையும் இந்த மிக்ஜாம் புயல் விட்டு வைக்கவில்லை. அப்பார்ட்மெண்ட் வீடுகளில் செம சேஃப் ஆக இருக்கிறோம் என நினைத்துக் கொண்டிருந்த பலரும் சென்னையில் 38 மணி நேரத்துக்கு மேல் கொட்டித் தீர்த்த மழை காரணமாக சிக்கி சின்னாபின்னமாகி உள்ளனர்.

பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் வடிந்தாலும், தெருவுக்குள் பல வீடுகளுக்குள் தண்ணீர் இன்னமும் வடியாமல் தேங்கி இருப்பது பலரையும் பாதிப்புக்குள்ளாக்கி உள்ளது.
அமீர்கானே மாட்டிக்கிட்டாரு: மும்பையில் இருந்து தனது அம்மாவின் சிகிச்சைக்காக சென்னையில் தங்கியிருக்கும் பாலிவுட் நடிகர் அமீர்கான் இந்த மிக்ஜாம் புயலில் மாட்டிக் கொண்டு தவித்த நிலையில், அவரையும் நடிகர் விஷ்ணு விஷாலையும் மீட்புக் குழுவினர் படகு மூலம் மீட்டுக் கொண்டு வந்தனர். நடிகர் அஜித் இந்த விவரம் தெரிந்து அமீர் கான் மற்றும் விஷ்ணு விஷாலுக்கு தங்க இடம் கொடுத்து உதவி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உ ள்ளன.
கீர்த்தி பாண்டியன் ட்வீட்: நடிகர் அசோக் செல்வனை சமீபத்தில் திருமணம் செய்துக் கொண்ட நடிகை கீர்த்தி பாண்டியன் மயிலாப்பூரில் வசித்து வரும் நிலையில், திடீரென கொட்டித் தீர்த்த பேய் மழை காரணமாக அவரது அப்பார்ட்மென்ட் இருக்கும் விவேகானந்தா கல்லூர் இருக்கும் ராதாகிருஷ்ணன் சாலை பகுதியில் கடந்த 48 மணி நேரமாக கரன்ட் இல்லை என்றும் தண்ணீர் கிரவுண்ட் லெவல் வரை தேங்கியிருப்பதாகவும், யாரும் வெளியே செல்ல முடியாமல் சிக்கித் தவிக்கின்றனர். ஒருத்தர் கூட காப்பாற்ற வரவில்லை எனக் கூறியுள்ளார்.
தண்ணிக்கூட கிடைக்கல: அத்தியாவசிய தேவைகளுக்காக மக்கள் ரொம்பவே கஷ்டப்படுகின்றனர். தண்ணீர் கூட கிடைக்காமல் பலரும் தவித்து வருகின்றனர். நெட்வொர்க்கும் கிடைக்கவில்லை. மாடியில் ஏதாவது மூலையில் கிடைக்கும் கொஞ்சம் சிக்னலை வைத்துத் தான் ட்வீட் போடுகிறேன். சென்னை மாநகராட்சி நிர்வாகிகள் தயவு செய்து இந்த இடத்தின் பிரச்சனை சரி செய்ய வேண்டும் என கீர்த்தி பாண்டியன் ட்வீட் போட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











