கீர்த்தியின் சொந்த தயாரிப்பு வாஷி... அடுத்த வெலலில் படம்... அப்டேட் வெளியிட்ட படக்குழு!

திருவனந்தபுரம் : நடிகை கீர்த்தி சுரேஷ், தமிழ், மலையாளம், தெலுங்கு என சுழன்றடிக்கும் சூறாவளியாய் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார். இதனிடையே அவரது சொந்த தயாரிப்பான வாஷி படத்தின் அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.

நடிகை கீர்த்தி சுரேஷ்

நடிகை கீர்த்தி சுரேஷ்

நடிகை கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய மொழிகளில் சிறப்பான நாயகியாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். மலையாளம், தமிழ், தெலுங்கு என அடுத்தடுத்த மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் நிற்க நேரமில்லாமல் நடித்து வருகிறார். அவரது அடுத்தடுத்த படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கின்றன.

முன்னணி நடிகர்களுடன் ஜோடி

முன்னணி நடிகர்களுடன் ஜோடி

தமிழில் விஜய், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ள கீர்த்தி நடிப்பில் அடுத்ததாக அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் சாணிக் காயிதம் படம் ரிலீசாக உள்ளது. வரும் மே மாதம் 6ம் தேதி இந்தப் படம் நேரடியாக அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது.

உதயநிதிக்கு ஜோடி

உதயநிதிக்கு ஜோடி

இந்நிலையில் அடுத்ததாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதியுடன் மாமன்னன் படத்தில் ஜோடி சேர்ந்துள்ளார் கீர்த்தி. இந்தப் படத்தில் பகத் பாசில், வடிவேலுவும் முக்கிய கதாபாத்திரங்களில் கமிட் ஆகியுள்ளனர். படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

கீர்த்தி தயாரிப்பில் வாஷி

கீர்த்தி தயாரிப்பில் வாஷி

இதனிடையே, தெலுங்கில் மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக சர்க்காரு வாரி பட்டா, சிரஞ்சீவியுடன் வேதாளம் ரீமேக்கான போலோ சங்கர் படத்தில் அவரது தங்கையாகவும் நடித்து வருகிறார். இதனிடையே மலையாளத்தில் அவரது நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவாகி வருகிறது வாஷி.

வழக்கறிஞராக கீர்த்தி சுரேஷ்

வழக்கறிஞராக கீர்த்தி சுரேஷ்

டோவினோ தாமசுடன் இந்தப் படத்தில் கீர்த்தி இணைந்து நடித்துள்ளார். படத்தில் வழக்கறிஞர்களாக இருவரும் நடித்துள்ளனர். விஷ்ணு ஜி ராகவ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் படத்தின் அடுத்த அப்டேட் குறித்து படக்குழு தகவல் வெளியிட்டுள்ளது.

டப்பிங் பணிகள் துவக்கம்

டப்பிங் பணிகள் துவக்கம்

படத்தின் சூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருவதாகவும் படத்தின் டப்பிங் பணிகள் துவங்கப்பட்டுள்ளதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது. விரைவில் படத்தின் பணிகள் நிறைவுற்று படத்தின் ட்ரெயிலர் உள்ளிட்டவை வெளியாகவுள்ளதாகவும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X