கரண் ஜோஹர் படத்துல நடிக்காததுக்கு அவங்கதான் காரணம்.. சீக்ரெட்டை போட்டுடைத்த கிரீத்தி சனோன்!

மும்பை : நடிகை கிரீத்தி சனோன் பாலிவுட்டின் சூப்பர்ஹிட் ஹீரோயினாக காணப்படுகிறார். பல சிறப்பான படங்களில் நடித்து வருகிறார்.

கடந்த 2021ம் ஆண்டில் வெளியான மிமி படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை தற்போது இவர் தட்டிச் சென்றுள்ளார்.

இதனிடையே கரண் ஜோஹரின் லஸ்ட் ஸ்டோரிஸ் படத்தில் நடிக்க மறுத்ததற்கு காரணம் சொல்லியுள்ளார் கிரீத்தி சனோன்.

நடிகை கிரீத்தி சனோன்

நடிகை கிரீத்தி சனோன்

நடிகை கிரீத்தி சனோன் பாலிவுட்டில் சிறப்பான நடிகையாக காணப்படுகிறார். பல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் நடனமாடிய பரமசுந்தரி பாடல் இந்திய அளவில் சரியான ரீச்சை பெற்றது. கடந்த 2021ம் ஆண்டு வெளியான மிமி படத்தில் இவரது கேரக்டர் சிறப்பாக அமைந்திருந்தது.

சிறந்த நடிகைக்கான விருது

சிறந்த நடிகைக்கான விருது

இந்நிலையில் இந்தப் படத்திற்காக சிறந்த நடிகைக்காக ஃபிலிம் பேர் விருதை தற்போது பெற்றுள்ளார். முன்னதாக பி டெக் முடித்த இவர் நடிகையாகும் கனவுடன் மும்பைக்கு வந்துள்ளார். ஆனாலும் படத்தில் ஒப்பந்தம் ஆவதற்கு முன்பு தன்னுடைய அம்மாவிடம் அனுமதி பெற்ற பின்பே நடிக்க துவங்கினாராம்.

லஸ்ட் ஸ்டோரிஸ் வாய்ப்பை மறுத்த கிரீத்தி

லஸ்ட் ஸ்டோரிஸ் வாய்ப்பை மறுத்த கிரீத்தி

முன்னதாக கரண் ஜோஹரின் லஸ்ட் ஸ்டோரிஸ் படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை இவர் மறுத்துள்ளார். இதையடுத்து இந்தப் படத்தின் வாய்ப்பு நடிகை கியாரா அத்வானிக்கு சென்றுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தை தான் மறுத்ததற்கான காரணத்தை சமீபத்தில் இவர் பங்கு பெற்ற கரண் ஜோஹரின் காபி வித் கரண் நிகழ்ச்சியில் இவர் பேசியுள்ளார்.

முகம் சுளிக்கும் காட்சிகள்

முகம் சுளிக்கும் காட்சிகள்

ஒரு சில படங்களில் முகம் சுளிக்கும் காட்சிகள் அதிகமாக இருப்பதால் அந்தப் படங்களில் நடிக்க இவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதற்கு இவரது அம்மாவே காரணம் என்றும் கூறியுள்ளார். இதுபோலவே தான் லஸ்ட் ஸ்டோரிஸ் படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பையும் மறுத்ததாக கூறியுள்ளார்.

அம்மாவிற்கு பிடிக்கவில்லை

அம்மாவிற்கு பிடிக்கவில்லை

தான் அடிப்படையில் மிடில் கிளாஸ் குடும்பத்தை சேர்ந்த பெண் என்று கூறியுள்ள கிரீத்தி சனான். கரண் ஜோஹரின் லஸ்ட் ஸ்டோரியின் கதை தனது அம்மாவிற்கு பிடிக்கவில்லை என்றும் அதனால் அந்தப் படத்தை தான் ஏற்கவில்லை என்றும் கூறினார். இதுபோன்ற கதைக்களங்கள் தன்னுடைய அம்மாவிற்கு சங்கடத்தை ஏற்படுத்தும் என்றும் அதை தான் விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார்.

கதை பிடித்தால் ஓகே தான்

கதை பிடித்தால் ஓகே தான்

தொடர்ந்து பேசிய கிரீத்தி சனோன், ஆனால் எல்லா படங்களிலும் நடிக்க தான் தன்னுடைய அம்மாவின் அனுதியை கேட்டுக் கொண்டிருக்க மாட்டேன் என்றும் தனது மனதிற்கு பிடித்தமான கதைகளுக்கு உடனடியாக ஓகே சொல்லிவிடுவேன் என்றும் தெரிவித்துள்ளார். அவரின் இந்தப் பேட்டி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X