வெளியானது கீர்த்தி சுரேஷின் காந்தாரி வீடியோ பாடல்... என்ன அழகா ஆடுறாங்க!

ஐதராபாத் : நடிகை கீர்த்தி சுரேஷ் தென்னிந்தியாவின் பிரபலமான நடிகையாக இருக்கிறார்.

இவரது நடிப்பில் சாணிக் காயிதம், சர்க்காரு வாரிப்பட்டா, வாஷி, போலே சங்கர் உள்ளிட்ட படங்கள் வெளியாகவுள்ளன.

இந்நிலையில் தற்போது இவரது நடிப்பில் நடன மாஸ்டர் பிருந்தா இயக்கத்தில் உருவாகியுள்ள காந்தாரி படத்தின் பாடல் வெளியாகியுள்ளது.

நடிகை கீர்த்தி சுரேஷ்

நடிகை கீர்த்தி சுரேஷ்

நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க வந்து குறைந்த காலத்திலேயே நல்ல நடிகை என்ற பெயரையும் ஏராளமான ரசிகர்களையும் பெற்றுள்ளார். இவரது மகா நடி படம் தெலுங்கில் மட்டுமின்றி தமிழிலும் இவருக்கு சிறப்பான பெயரை பெற்றுத் தந்துள்ளது. இதையடுத்து தமிழில் விஜய், தனுஷ், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் கீர்த்தி.

சாணிக் காயிதம் படம்

சாணிக் காயிதம் படம்

தொடர்ந்து இவரது நடிப்பில் தற்போது செல்வராகவனுடன் இணைந்து இவர் நடித்துள்ள சாணிக் காயிதம் படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இந்தப் படத்தை ராக்கி படத்தை இயக்கியுள்ள அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். செல்வராகவன் நடிகராகவும் இணைந்துள்ள இந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் வித்தியாசமான கீர்த்தியை பார்க்க முடிகிறது.

குட் லக் சகி படம்

குட் லக் சகி படம்

சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான குட் லக் சகி படத்தில் துப்பாக்கி சுடும் வீராங்கனையாக நடித்திருந்தார் கீர்த்தி. இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இதனிடையே மகேஷ் பாபுவுடன் இவர் நடித்துள்ள சர்க்காரு வாரிப் பட்டாவும் விரைவில் ரிலீசாக உள்ளது.

அடுத்தடுத்த படங்கள்

அடுத்தடுத்த படங்கள்

இதனிடையே தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகியுள்ள போலே சங்கர் படத்திலும் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்துள்ளார். மேலும் மலையாளத்தில் டொவினோ தாமசுடன் இணைந்து வாஷி படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை தன்னுடைய குடும்பத்தினருடன் இணைந்து தயாரிக்கவும் செய்கிறார் கீர்த்தி. படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

பிருந்தா இயக்கத்தில் காந்தாரி

பிருந்தா இயக்கத்தில் காந்தாரி

இந்நிலையில், முன்னணி நடன இயக்குநர் பிருந்தா நடனம் மற்றும் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள காந்தாரி படத்தின் முதல் பாடல் இன்றைய தினம் வெளியாகி உள்ளது. முன்னதாக படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் பாடலுக்கான பிரமோவையும் படக்குழு வெளியிட்டது. படத்திற்கு பவன் சிஎச் இசையமைத்துள்ளார்.

சிறப்பான நடனம்

சிறப்பான நடனம்

மிகவும் கலர்புல்லாக அமைந்துள்ள இந்தப் பாடலில் சிறப்பான நடனத்தை பதிவு செய்துள்ளார் கீர்த்தி சுரேஷ். சுடாலா அசோக் தேஜா வரிகளில் பவன் சிஎச் இசையில் இந்த பாடல் கலக்கல் காம்போவாக அமைந்துள்ளது. விரைவில் படம் ரிலீசாக உள்ளதாக தெரிகிறது. நடனத்தில் மாஸ்டராக திகழும் பிருந்தாவின் கைவண்ணத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் நடனத்திற்கு முக்கியத்துவம் தரப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X