'TSK' படத்தில் சொந்தக் குரலில் பேசாத கீர்த்தி சுரேஷ்.. டப்பிங் இவர்தான்!
சென்னை : 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான கீர்த்தி சுரேஷ் தற்போது முன்னனி நடிகர்களுடன் நடித்து வருகிறார். சூர்யாவுடன் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் முதல் முறையாக ஜோடி சேர்ந்துள்ளார். இந்தப் படம் விரைவில் வெளியாகவுள்ளது.
சொடக்கு பாடல் மற்றும் படத்தின் டீசர் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது. தெலுங்கில் 'கேங்' என்ற பெயரில் வெளியாகிறது 'தானா சேர்ந்த கூட்டம்'. பொங்கல் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது தானா சேர்ந்த கூட்டம்.

இதுவரை கீர்த்தி சுரேஷ் அவரது படங்களுக்கு தானே குரல் கொடுத்து வந்தார். ஆனால் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் அவர் தன் சொந்தக் குரலில் பேசவில்லையாம். அவருக்காக இந்தப் படத்தில் டப்பிங் பேசியவர் அக்ஷயா.
இது பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் கீர்த்தி சுரேஷுக்கு தான் பேசியிருப்பதாகவும், சூர்யாவையும், இயக்குநர் விக்னேஷ் சிவனையும் சந்தித்ததாகவும் அக்ஷயா கூறியுள்ளார். மேலும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











