அஜித்தின் வேதாளம் ரீமேக்.. சிரஞ்சீவிக்கு தங்கையாக நடிக்கிறாரா? கீர்த்தி சுரேஷ் இப்படி விளக்கம்!

By

சென்னை: வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிப்பது பற்றி நடிகை கீர்த்தி சுரேஷ் விளக்கம் அளித்துள்ளார்.

அஜித்குமார் நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான படம், வேதாளம்.

இதில் ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன், ராகுல் தேவ், கபீர் சிங், சூரி உட்பட பலர் நடித்திருந்தனர்.

ஆலுமா டோலுமா

ஆலுமா டோலுமா

வெற்றி ஒளிப்பதிவு செய்த இந்தப் படத்தை சிறுத்தை சிவா இயக்கி இருந்தார். ஏ.எம்.ரத்னம் தயாரித்திருந்த இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைத்திருந்தார். இதில் இடம்பெற்ற ஆலுமா டோலுமா பாடல் செம ஹிட்டானது. இந்தப் படம் பெங்காலியில் சுல்தான் என்ற பெயரில் கடந்த ஆண்டு ரீமேக் ஆனது.

சிரஞ்சீவி நடிக்கிறார்

சிரஞ்சீவி நடிக்கிறார்

இது இந்தியில் ஜான் ஆபிரஹாமின் நடிப்பில் ரீமேக் ஆகிறது. தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பதாகக் கூறப்பட்டது. பின்னர் சிரஞ்சீவி நடிக்க முடிவானது. இந்தப் படத்தின் ஷூட்டிங் இன்னும் சில மாதங்களில் தொடங்க இருக்கிறது. மஹர் ரமேஷ், படத்தை இயக்குகிறார்.

கால்ஷீட் பிரச்னை

கால்ஷீட் பிரச்னை

வேதாளம் படத்தில் தங்கை கேரக்டர் முக்கியமானது. அதில், லட்சுமி மேனன் நடித்திருந்தார். அதனால் சிரஞ்சீவிக்கு தங்கையாக நடிக்க வைக்க முன்னணி நடிகைகளிடம் பேசி வந்தனர். நடிகை கீர்த்தி சுரேஷ், சாய் பல்லவி ஆகியோரிடன் பேசினர். சாய் பல்லவி கால்ஷீட் பிரச்னை காரணமாக நடிக்கவில்லை.

நடிக்க இயலவில்லை

நடிக்க இயலவில்லை

கீர்த்தி சுரேஷ், நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. இதுபற்றி டோலிவுட்டில் செய்திகள் வெளியாயின. இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் இதை மறுத்துள்ளார். தன்னிடம் பேசியது உண்மை. ஆனால், இந்தப் படத்தில் நடிக்க இயலவில்லை என்று தெரிவித்துள்ளார். இதனால் வேறு ஹீரோயினை படக்குழு தேடி வருகிறது.

சர்க்காரு வாரி பாட்டா

சர்க்காரு வாரி பாட்டா

கீர்த்தி சுரேஷ், இப்போது மிஸ் இந்தியா என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். நரேந்திர நாத் இயக்கியுள்ள இந்தப் படம் நவம்பர் 4 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது. நிதினுடன் ரங் தே, ரஜினியின் அண்ணாத்தே, மகேஷ்பாபு ஹீரோவாக நடிக்கும் சர்க்காரு வாரி பாட்டா படங்களில் நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X