பாலா -சூர்யா கூட்டணியில் இணைந்த பிரபல ஹீரோயின்... அப்டேட் வெளியிட்ட படக்குழு!

சென்னை : நடிகர் சூர்யா 20 ஆண்டுகள் கழித்து மீண்டும் பாலா இயக்கத்தில் தற்போது இணைந்துள்ளார்.

இதுகுறித்து சூர்யா தனது தந்தையின் பிறந்தநாளின் போது கடந்த மாதத்தில் உறுதிப்படுத்தினார்.

சூர்யாவின் தயாரிப்பில் இந்தப் படம் உருவாகவுள்ள நிலையில் தற்போது ஹீரோயின் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

நடிகர் சூர்யா

நடிகர் சூர்யா

நடிகர் சூர்யா தொடர்ந்து சிறப்பான பல படங்களில் நடித்து வருகிறார். அவரது அடுத்தடுத்த வெற்றிப் படங்களாக சூரரைப் போற்று மற்றும் ஜெய் பீம் படங்கள் அமைந்துள்ளன. அவரது தயாரிப்பில் உருவாகியுள்ள ஜெய் பீம் படம் தீபாவளியையொட்டி அமேசான் ப்ரைமில் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது.

ஜெய் பீம் படம்

ஜெய் பீம் படம்

அனைத்து தரப்பினரும் இந்தப் படத்தை சிறப்பான விமர்சனங்களால் நிறைத்துள்ளனர். சூர்யா கேரியரில் முதல் முறையாக வழக்கறிஞராக இந்தப் படத்தில் நடித்துள்ள நிலையில், படத்தின் விமர்சனங்கள் அவரை மட்டுமின்றி அவரை சார்ந்தவர்களையும் ரசிகர்களையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

சூர்யாவை வடிவமைத்த பாலா

சூர்யாவை வடிவமைத்த பாலா

சூர்யா தனது சினிமா கேரியரை துவக்கியபோது அவரை வடிவமைத்த இயக்குநர்களில் முக்கியமானவர் இயக்குநர் பாலா. அவரது இயக்கத்தில் பிதாமகன், நந்தா ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களின் விருப்பத்திற்குரிய நடிகராக மாறினார் சூர்யா. காதல் படங்களில் நடித்து வந்தவரை தேர்ந்த நடிகராக்கிய புண்ணியம் பாலாவையும் சேரும்.

தேர்ந்தெடுத்த கதைகள்

தேர்ந்தெடுத்த கதைகள்

இந்த படங்களை தொடர்ந்தே தேர்ந்தெடுத்த கதைகளில் நடித்து தன்னை மெருகேற்றிக் கொண்டார் சூர்யா. தொடர்ந்து சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில் 20 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் பாலாவின் இயக்கத்தில் இணைந்துள்ளார் சூர்யா.

சூர்யா -பாலா கூட்டணி

சூர்யா -பாலா கூட்டணி

சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கவுள்ளது. சமீபத்தில் தன்னுடைய தந்தையின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது பாலா மற்றும் சிவக்குமாருடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு இந்தப் படத்தினை உறுதி செய்தார் சூர்யா.

ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ்

ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ்

இந்தப் படத்தின் மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வந்த நிலையில், தற்போது படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாலா படத்திற்காக அவருடைய மேக்கப் உள்ளிட்டவை மாற்றப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

3 மாதத்தில் நிறைவு செய்ய திட்டம்

3 மாதத்தில் நிறைவு செய்ய திட்டம்

முன்னதாக சாணிக் காயிதம் படத்திலேயே கீர்த்தி சுரேஷின் கெட்டப் சிறப்பாக மாற்றப்பட்டுள்ள நிலையில், தற்போது பாலா படத்தில் அவர் எவ்வாறு தோன்றுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங் 3 மாதத்தில் நடத்தி முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிவாவுடன் இணையும் சூர்யா

சிவாவுடன் இணையும் சூர்யா

அடுத்த ஆண்டு பிப்ரவரியில் டைரக்டர் சிவாவின் இயக்கத்தில் சூர்யா இணையவுள்ள நிலையில் முன்னதாக பாலாவின் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தின் சூட்டிங்கை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. முன்னதாக இந்த கூட்டணியில் பிதாமகன், நந்தா படங்கள் சிறப்பாக அமைந்துள்ள நிலையில், இந்த படமும் ரசிகர்களுக்கு சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X