கீர்த்தி சுரேஷின் படம் ஓடிடியில் ரிலீஸ்!
சென்னை : நடிகை கீர்த்தி சுரேஷ் இப்போது தமிழில் சாணிக் காகிதம், அண்ணாத்த போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
தெலுங்கில் குட்லக் சகி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் கடந்த மாதம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற ரங் தே தற்பொழுது ஓடிடியில் வெளியாகிறது என தெரிய வந்துள்ளது.

வெற்றி பெறவில்லை
தமிழ்,தெலுங்கு,மலையாளம் போன்ற மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் இது என்ன மாயம் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டார். விக்ரம் பிரபுக்கு ஜோடியாக நடித்திருந்தார். ஆனால் படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. இந்த நிலையில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்த ரஜினி முருகன் இவரை புகழின் உச்சிக்கு கூட்டிச் சென்றது.

தேசிய விருதை
தொடர்ந்து வெற்றிப் படங்கள் தொடர்ந்து முன்னணி ஹீரோக்களின் ஜோடி என பிஸியான கீர்த்தி சுரேஷ்-க்கு தெலுங்கு திரைப்படத் துறை வாய்ப்புகளை அள்ளித் தர கை நிறைய திரைப்படங்களுடன் தெலுங்கு திரைப்படத் துறையில் வெற்றிகரமாக வலம் வந்து கொண்டுள்ளார். மேலும் மகாநடியில் நடித்து தேசிய விருதையும் பெற்றார்.

அடுத்ததாக விஜய்
தற்பொழுது கைவசம் தமிழில் சாணிக் காகிதம் மற்றும் அண்ணாத்த போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதில் சாணிக் காகிதம் திரைப்படத்தில் இயக்குனர் செல்வராகவன் முதல் முறையாக நடிகராக அறிமுகமாகிறார். இவ்விரு படங்களையும் முடித்துவிட்டு அடுத்ததாக விஜய் நடிக்கும் திரைப்படத்தில் இவர் நடிக்க இருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் பேச்சுக்கள் அடிபடுகிறது .

ஓடிடியில் ரிலீஸ்
தெலுங்கில் இளம் நடிகராக உள்ள நிதின் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்த " ரங் தே " சென்ற மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் தற்போது ஓடிடியில் ரிலீசாக உள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி ஜூன் 12ஆம் தேதி ஜீ 5 தளத்தில் இப்படம் ரிலீசாகிறது.


Click it and Unblock the Notifications











