Keerthi suresh: இதனால தான் மஞ்சள் கயிறை மாத்தலை.. கீர்த்தி சுரேஷ் சொன்ன விளக்கம்!

சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் அடுத்தடுத்த படங்களில் தன்னை இணைத்துக் கொண்டு நடித்து வருகிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு தமிழில் அவரது ரகு தாத்தா படம் வெளியான நிலையில், அடுத்ததாக ரிவால்வர் ரீட்டா படமும் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இதனிடையே பாலிவுட்டில் தெறி படத்தின் ரீமேக்காக பேபி ஜான் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

பேபி ஜான் படம் மூலம் பாலிவுட்டில் தன்னுடைய என்ட்ரியை கொடுத்திருந்தார் கீர்த்தி சுரேஷ். கடந்த மாதத்தில் இவரது திருமணம் நடந்தநிலையில் சில தினங்களிலேயே பேபி ஜான் படத்தின் பிரமோஷன்களில் ஈடுபட்டார். அப்போது இவரது கெட்டப் மட்டுமில்லாமல் கழுத்தில் அணிந்திருந்த மஞ்சள் தாலியும் ரசிகர்களை கவர்ந்திருந்தது.

keerthi suresh baby john movie tamil cinema

நடிகை கீர்த்தி சுரேஷ்: நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு, மலையாள மொழிப் படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார். தமிழில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கீர்த்தி நடிப்பில் வெளியான ரகு தாத்தா படம் நாயகியை மையமாக கொண்டு உருவாகியிருந்தது. இந்தப் படம் கலவையான விமர்சனங்களையே பெற்ற நிலையில், அடுத்ததாக அதேபோன்று நாயகியை மையமாக கொண்டு ரிவால்வர் ரீட்டா படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது.இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்திருந்தது. படத்தில் கீர்த்திக்கு ஆக்ஷன் காட்சிகளும் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

keerthi suresh baby john movie tamil cinema

பேபி ஜான் படம்: இதனிடையே கடந்த வாரத்தில் கீர்த்தி சுரேஷ், வருண் தவான், வமிகா கபி ஆகியோர் லீட் கேரக்டர்களில் நடித்து பேபி ஜான் படம் வெளியானது. இந்தப் படம் மூலம் பாலிவுட்டிலும் தன்னுடைய என்ட்ரியை கீர்த்தி சுரேஷ் செய்திருந்தார். அட்லி தயாரிப்பில் இந்தப் படத்தை காலீஸ் இயக்கியிருந்தார். தமிழில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வெளியான தெறி படத்தின் ரீமேக்காக பேபி ஜான் படம் உருவாகியிருந்த நிலையில், தமிழில் பிளாக்பஸ்டர் ஹிட்டடித்த இந்தப் படம் இந்தி ரசிகர்களை கவரவில்லை. கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

keerthi suresh baby john movie tamil cinema

கீர்த்தி சுரேஷ் -ஆண்டனி திருமணம்: இதனிடையே கடந்த மாதம் 12ம் தேதி கோவாவில் கீர்த்தி சுரேஷிற்கு திருமணம் நடந்தது. அவருடைய நீண்ட நாள் காதலர் ஆண்டனி தட்டிலை கோவாவில் கீர்த்தி திருமணம் செய்துக் கொண்டார். இதில் நடிகர் விஜய், திரிஷா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் ஆகியோர் கலந்துக் கொண்டனர். திருமணம் நடந்து எந்தவிதமான கொண்டாட்டத்திலும் ஈடுபடாத கீர்த்தி சுரேஷ், சில தினங்களிலேயே பேபி ஜான் படத்தின் பிரமோஷன்களில் கலந்துக் கொண்டார். வருண் தவான், வமிகா கபி ஆகியோருடன் இணைந்து படத்தின் பிரமோஷன்களுக்காக பல பேட்டிகளையும் கொடுத்திருந்தார்.

keerthi suresh baby john movie tamil cinema

மஞ்சள் தாலி குறித்து கீர்த்தி சுரேஷ்: இந்த பிரமோஷன்களில் கீர்த்தியின் கெட்டப் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. மேலும் அவர் கழுத்தில் மஞ்சள் தாலியை அணிந்துக் கொண்டு பிரமோஷன்களில் கலந்துக் கொண்டார். இதையடுத்து அவர் தங்க தாலியை மாற்றாமல் மஞ்சள் கயிறுடன் இருந்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த கீர்த்தி சுரேஷ், ஒரு குறிப்பிட்ட நாட்கள் வரை மஞ்சள் கயிறை மாற்றக்கூடாது என்று கூறியுள்ளார். மஞ்சள் கயிறை மாற்றுவதற்கு நல்ல நாள் பார்த்துக் கொண்டிருப்பதாகவும் ஜனவரி இறுதியில் மாற்ற திட்டமிட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X