Don't Miss!
- News
அதிமுக டைம்லைன்: பொதுக்குழு முதல் இடைத்தேர்தல் வரை.. ஓபிஎஸ், இபிஎஸ் சர்ச்சை, வழக்கு, மேல்முறையீடு!
- Finance
பைஜூவில் 15% ஊழியர்கள் பணி நீக்கம்.. ஏன் தெரியுமா.. யாருக்கெல்லாம் பாதிப்பு..!
- Lifestyle
இந்த 4 செடிகளில் ஒன்று உங்க வீட்டில் இருப்பது அதிர்ஷ்டம் மற்றும் மகிழ்ச்சியைக் கொண்டு வருமாம்!
- Automobiles
முன்ன மாதிரியில்ல ஹோண்டா வாகனங்கள் மீது நம்பிக்கை இழக்கும் மக்கள்... கிடுகிடுவென சரியும் விற்பனை!
- Sports
ஹர்திக் கொடுத்த பலே ஐடியா.. சதத்திற்கு நீங்க தான் காரணம்.. ஹர்திக் குறித்து சுப்மன் கில் பேச்சு
- Technology
36 லட்ச WhatsApp பயனர்களுக்கு ஆப்பு.! உப்பு தின்னா தண்ணி குடிக்கனும்., தப்பு செஞ்சா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
FIFA World Cup 2022 : மெஸ்ஸி இன்று உங்கள் நாள்..அர்ஜென்டினாவுக்கு வாழ்த்து சொன்ன கீர்த்தி சுரேஷ்!
சென்னை : உலக கோப்பையை கைப்பற்றிய மெஸ்ஸிக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார்
22வது உலகக்கோப்பை கால்பந்தாட்டப்போட்டி கத்தாரில் நடைபெற்றது. பல்வேறு அதிரடிகள், ஆச்சரியங்கள், ஆரவாரத்தை ஏற்படுத்திய உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது.
இறுதிப்போட்டியில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி ஹூகோ லோரிஸ் தலைமையிலான பிரான்சை எதிர்கொண்டது.
கீர்த்தி
சுரேஷ்
முதல்
பிரிகிடா
வரை..
இந்த
ஆண்டு
'A'
சான்றிதழ்
படங்களில்
மிரட்டிய
டாப்
5
நடிகைகள்!

FIFA World Cup 2022
ஆட்டம் தொடங்கியது முதலே பரபரப்புக்கு பஞ்சமே இல்லாமல் ஆட்டம் சூடுபிடித்தது. உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் தொலைக்காட்சி, இணையதளத்திலும் போட்டியை திகிலுடன் பார்த்தார்கள். ஆட்டத்தின் 23வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்திய அர்ஜென்டினா கேப்டன் மெஸ்ஸி அபாரமான கோல் அடித்தார். ஆட்டத்தின் முதல் பாதியில் அர்ஜென்டினா 2 கோல்கள் அடித்திருந்தது.

அர்ஜெர்டினா வெற்றி
ஆட்டத்தின் 2வது பாதியில் பிரான்ஸ் வீரர் கிலியன் எம்பாபோ முதல் கோல் அடித்தார். அதன்பின் அடுத்தடுத்த சில நிமிடத்திலேயே கிலியன் எம்பாபோ 2வது கோல் அடித்து 2க்கு2 என்ற கோல் கணக்கில் ஆட்டம் டிராவில் இருந்தது. இதையடுத்து பெனால்டி ஷூட் அவுட் முறையில் 4க்கு2 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா வெற்றி பெற்றது.

குவியும் வாழ்த்துக்கள்
உலக கோப்பையில் கோல்டன் பால் விருதை 2 முறை பெற்ற முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையும் மெஸ்ஸி படைத்தார். அர்ஜென்டினா அணி வெற்றி பெற்றதை உலகம் முழுவதும் கொண்டாடி வருகிறார்கள். பிரதமர் நரேந்திர மோடி,தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்பட பலரும் மெஸ்ஸிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மெஸ்ஸி இன்று உங்கள் நாள்
இந்நிலையில், மெஸ்ஸியின் தீவிர ரசிகையான நடிகை கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மெஸ்ஸியின் போட்டோவை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார். கால்பந்து மைதானத்தை அலங்கரித்த சிறந்த வீரருக்கு வாழ்த்துக்கள். மெஸ்ஸி இன்று உங்கள் நாள் என்றும் ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெற்று வரலாற்றை உருவாக்கி உள்ளீர்கள் என்றும் இந்த பதிவில் கீர்த்தி சுரேஷ் கூறியுள்ளார். அவரின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.