'சண்ட.. சண்ட.. கோழி...’ கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட விஷாலின் க்யூட் வீடியோ!
சண்டக்கோழி 2 படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட வீடியோவை கீர்த்தி சுரேஷ் வெளியிட்டுள்ளார்.
சென்னை: சண்டைக்கோழி 2 படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ்.
லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடித்து 2005-ல் வெளியான படம் சண்டக்கோழி. ரூ.10 கோடி செலவில் எடுக்கப்பட்ட அந்த படம் ரூ.30 கோடிக்கு மேல் வசூலித்ததாக கூறப்பட்டது. இதனால் அதன் இரண்டாம் பாகத்தையும் சண்டக்கோழி-2 என்ற பெயரில் எடுத்து வருகின்றனர்..

இதில் விஷால் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். ராஜ்கிரண், வரலட்சுமியும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள்.
இப்படம் வரும் ஆயுத பூஜை நாளான அக்டோபர் 18-ந் தேதி தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் வெளியாகிறது. அதாவது கீர்த்தி சுரேஷின் பிறந்தநாளுக்கு (அக்டோபர் 17) மறுதினம் ரிலீசாகிறது.
இந்நிலையில், சண்டைக்கோழி 2 படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் கீர்த்தி. அதில், நிஜ சண்டைக்கோழி ஒன்றுடன் விஷால் சண்டைக்குத் தயாராவது போன்று காட்சிகள் உள்ளது.
கூடவே கீர்த்தி, 'சண்ட சண்ட கோழி' எனக் கூறுவதும், அதைக் கேட்டு விஷால் சிரிப்பது போன்ற காட்சிகளும் உள்ளது.


Click it and Unblock the Notifications











