பேட் லக்கிலிருந்து குட் லக்... துப்பாக்கி சுடறதுல பின்னி பெடலெடுக்கும் கீர்த்தி சுரேஷ்!

ஐதராபாத் : நடிகை கீர்த்தி சுரேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் குட் லக் சகி.

இந்தப் படம் வரும் 28ம் தேதி தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் படத்தின் கலக்கலான ட்ரெயிலர் வெளியாகியுள்ளது.

நடிகை கீர்த்தி சுரேஷ்

நடிகை கீர்த்தி சுரேஷ்

நடிகை கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். இவரது நடிப்பில் தற்போது தமிழில் சாணிக் காயிதம் படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் இயக்குநர் செல்வராகவனுடன் இணைந்து நடித்துள்ளார். படம் வரும் ஏப்ரலில் அமேசான் பிரைமில் நேரடியாக ஓடிடி ரிலீசாக வெளியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கதைக்கு முக்கியத்துவம்

கதைக்கு முக்கியத்துவம்

நடிகைகள் எப்போதுமே தன்னை அழகாக காட்டிக் கொள்ளவே விருப்பம் கொள்வார்கள். ஆனால் கீர்த்தி சுரேஷ் தன்னுடைய திறமைக்கு சவாலான படங்களில் நடிப்பதை அதிகமாக விரும்புகிறார். சாணிக் காயிதம் படத்தில் வழிப்பறி கொள்ளையராக இவர் நடித்துள்ளார்.

குட் லக் சகி படம் ரிலீஸ்

குட் லக் சகி படம் ரிலீஸ்

இதேபோல தெலுங்கிலும் இவர் நடிப்பில் உருவாகி வரும் 28ம் தேதி ரிலீசாக உள்ளது குட் லக் சகி. இந்தப் படம் தெலுங்கில் மட்டுமின்றி தமிழ் மற்றும் மலையாளத்திலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாக உள்ளது. இந்தப் படத்தை நாகேஷ் குகனூர் இயக்கியுள்ளார்.

முதன்மை கதாபாத்திரத்தில் கீர்த்தி

முதன்மை கதாபாத்திரத்தில் கீர்த்தி

படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் துப்பாக்கி சுடும் வீராங்கனையாக நடித்துள்ளார் கீர்த்தி. சாதாரண கிராமத்து பெண்ணாக இருக்கும் கீர்த்தி, இந்திய துப்பாக்கி சுடும் அணியில் இடம்பெறுவது என கதை செல்கிறது. கடந்த ஆண்டில் வெளியான இந்தப் படத்தின் டீசர் லட்சக்கணக்கில் வியூஸ்களை பெற்றது.

28ம் தேதி ரிலீஸ்

28ம் தேதி ரிலீஸ்

இந்நிலையில் படம் வரும் 28ம் தேதி ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி படத்தின் ட்ரெயிலர் தற்போது வெளியாகியுள்ளது. இதில் படத்தின் சில காட்சிகளை கண்முன்னே படக்குழு கொண்டு வந்துள்ளது. படத்தில் பேட் லக் சகியாக இருக்கும் பெண் எவ்வாறு குட் லக் சகியாக மாறுகிறார் என்பதாக கதை நகர்கிறது.

தள்ளிப் போன ரிலீஸ்

தள்ளிப் போன ரிலீஸ்

கடந்த ஆண்டிலேயே ரிலீஸ் திட்டமிடப்பட்டிருந்த இந்தப் படம் கொரோனா பரவல் காரணமாக ரிலீஸ் தள்ளிப் போயுள்ளது. படத்தில் கீர்த்தி சுரேஷுடன் ஆதி, ஜெகபதிபாபு உள்ளிட்டவர்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்திற்கு இசையமைத்துள்ளார் தேவிஸ்ரீ பிரசாத்.

சிறப்பான வரவேற்பு

சிறப்பான வரவேற்பு

விளையாட்டை மையமாக கொண்டு வெளியாகும் படங்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் முக்கியத்துவம் கொடுத்து வெற்றி பெற செய்வார்கள். அந்த வகையில் இந்தப் படமும் மிகவும் சிறப்பான வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கலாம். அதற்கு ஏற்றாற்போல படத்தின் டீசர், ட்ரெயிலர் உள்ளிட்டவையும் மிகுந்த வரவேற்பை பெற்று வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X