கண்ணாலேயே சொடக்கு போடும் கீர்த்தி சுரேஷ் - வைரலாகும் வீடியோ

By Vignesh Selvaraj

Recommended Video

கண்ணாலேயே சொடக்கு போடும் கீர்த்தி சுரேஷ் -வீடியோ

சென்னை : விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ் நாளாக நடித்து வரும் படம் 'தானா சேர்ந்த கூட்டம்'. இயக்குநர் விக்னேஷ் சிவன் ட்விட்டர் பக்கம் வந்தாலே படத்தின் அப்டேட் கேட்டு நச்சரிக்கிறார்கள் சூர்யா ரசிகர்கள்.

அதற்குப் பயந்தே படத்தின் ரிலீஸ் தேதி வரை மொத்தமாக அறிவித்துவிட்டார் விக்னேஷ் சிவன். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் வெளியான 'சொடக்கு' பாடல் ரசிகர்களை ஈர்த்துள்ளது.

'சொடக்கு மேல சொடக்கு போடுது என் விரல் வந்து நடுத்தெருவில் நின்னு சொடக்கு போடுது...' என விக்னேஷ் சிவன், மணி அமுதவனின் வரிகளில் அனிருத் இசையில் பட்டையைக் கிளப்புகிறது.

சொடக்கு மேல சொடக்கு

சொடக்கு மேல சொடக்கு

இந்தப் பாடலை அந்தோணி தாசன் பாடியிருக்கிறார். இந்தப் பாடலுக்கு நடிகர் செந்திலும் சொடக்கு போட்டிருக்கிறார். முன்னதாக வெளியான சொடக்கு பாடல் டீஸரில் ஜிமிக்கி கம்மல் புகழ் ஷெரில் வந்து சொடக்கு போட்டார்.

லிரிக்கல் வீடியோ

சொடக்கு பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியானதை அடுத்து, சூர்யா ரசிகர்கள் உற்சாகமாகப் பகிர்ந்து வருகிறார்கள். சொடக்கு பாடலில் 'அதிகாரத்திமிரை பணக்கார பவரை தூக்கிப் போட்டு மிதிக்கத் தோணுது' என செமத்தியாக வரும் வரிகளால் சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கீர்த்தி சுரேஷ்

'சொடக்கு மேல சொடக்கு போடுது' பாடலுக்கு கீர்த்தி சுரேஷ் சொடக்கு போட்டு அந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றி இருக்கிறார்.

கீர்த்தி ரசிகர் மன்றம்

'கை சொடக்கும், ஐ (கண்) சொடக்கும் அப்படியே சும்மா எங்களைக் கொல்லுதே.. அன்பு, அழகு, ஆற்றல், அடக்கம் எங்கள் தங்கம் கீர்த்தி' என கீர்த்தி ரசிகர்கள் உற்சாகமாக ரிப்ளை செய்திருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X