'வேதனைகளைக் கொடுத்த அந்தப் படத்தால் தான் இதுவும் நடந்தது' - கீர்த்தி சுரேஷ்

By Vignesh Selvaraj

Recommended Video

இத மட்டும் பண்ணலேன்னா எங்கேயோ போய்ருவீங்க கீர்த்தி- வீடியோ

சென்னை : கீர்த்தி சுரேஷ், துல்கர் சல்மான், சமந்தா ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'மகாநதி' தமிழில் 'நடிகையர் திலகம்' என்ற பெயரில் ரிலீஸ் ஆகவிருக்கிறது.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் பேசிய நாயகி கீர்த்தி சுரேஷ் பல தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

'தொடரி' படத்தைப் பார்த்து பலர் குறை சொன்னாலும், அந்தப் படத்தின் மூலம் தான் இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது எனப் பேசியுள்ளார் கீர்த்தி சுரேஷ்.

நடிகையர் திலகம்

நடிகையர் திலகம்

கீர்த்தி சுரேஷ் தற்போது நிறைய படங்களில் நடித்து வருகிறார். விஜய்யுடன் 'விஜய் 62', விஷாலுடன் 'சண்டக்கோழி 2', விக்ரமுடன் 'சாமி 2' ஆகிய படங்களிலும் ரிலீஸ் ஆகவிருக்கும் 'நடிகையர் திலகம்' படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில் 'நடிகையர் திலகம்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசினார் கீர்த்தி.

தொடரி

தொடரி

"தொடரி படத்தின் மூலம் எனக்கு ஏதாவது நல்லது நடக்கும் என எதிர்பார்த்தேன். அந்தப் படம் வெளியானபோது சிலர் பாராட்டினார்கள். பலர் குறை சொன்னார்கள். அந்தப் படம் மூலம் தான் எனக்கு இந்தப் பட வாய்ப்பு கிடைத்ததுங்கிறது ரொம்ப சந்தோஷமா இருக்கு.

3 மணிநேரம் கதை

3 மணிநேரம் கதை

'நடிகையர் திலகம்' படத்துக்கு இயக்குநர் எனக்கு 3 மணிநேரம் கதை சொன்னார். இதுவரைக்கும் நான் நடித்த எந்தப் படத்திற்கும் இவ்வளவு நேரம் கதை கேட்டதில்லை. அவர் கதை சொல்வது அவ்வளவு இன்ட்ரஸ்டிங்கா சூப்பராக இருந்தது.

நம்பிக்கை

நம்பிக்கை

கதை கேட்டவுடன் உடனே நடிக்க சம்மதம் தெரிவிக்கவில்லை. இப்போதுதான் நல்ல படங்களில் நடித்து வருகிறேன்.. நடிகையர் திலகத்தின் வாழ்க்கை பற்றிய இந்தப் படத்தில் நடிக்க முடியுமா என நிறைய கேள்விகளும், சந்தேகங்களும் உருவாகின. இயக்குநர் தான் எனக்கு நம்பிக்கை கொடுத்து நடிக்க வைத்தார்." எனப் பேசினார் கீர்த்தி சுரேஷ்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X