அந்த ஆசை இருக்கு.. சிவகார்த்திகேயன் எப்படி சமாளிக்கிறார்?.. கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் இப்போது கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார்.அக்டோபர் 31ஆம் தேதி அவரது நடிப்பில் அமரன் படம் வெளியாகவிருக்கிறது. கடைசியாக GOAT படத்தில் கேமியோ ரோல் செய்திருந்தார். அது மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.மேலும் சிவகார்த்திகேயனிடம் துப்பாக்கியை கொடுத்து விஜய் பேசும் வசனமும், அதற்கு சிவகார்த்திகேயன் கொடுத்த ரிப்ளையும் செம ரெஸ்பான்ஸை தியேட்டர்களில் பெற்றது. இந்தச் சூழலில் அவர் குறித்து கீர்த்தி சுரேஷ் ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார்

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக அயலான் திரைப்படம் வெளியானது. அது மிகப்பெரிய வெற்றி பெற்றது. குறிப்பாக தனுஷின் கேப்டன் மில்லர் படத்தோடு போட்டியாக களமிறங்கி பந்தயம் அடித்தது. இதன் காரணமாக சிவகார்த்திகேயன் அபாரமாக வளர்ச்சி அடைந்துவிட்டார் என்று பலரும் ஆச்சரியப்பட்டார்கள். இதற்கிடையே அவர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். கமல் ஹாசன் இந்தப் படத்தை தயாரித்திருக்கிறார்.

keerthi suresh sivakarthikeyan sk


அமரன் ரிலீஸ்: படமானது அக்டோபர் 31ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவிருக்கிறது.படத்தில் சாய் பல்லவி ஹீரோயினாக நடித்திருக்கிறார். இந்திய ராணுவத்தின் முன்னாள் வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாகியிருக்கிறது. நிச்சயமாக இந்தப் படம் சிவாவின் கரியரில் அடுத்தக்கட்ட பாய்ச்சலாக இருக்கும் என்று அவரது ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

முருகதாஸுடன் கூட்டணி: மேலும் ஏ.ஆர்.முருகதாஸுடனும் கூட்டணி அமைத்திருக்கிறார் சிவகார்த்திகேயன். அந்தப் படத்தின் ஷூட்டிங்கும் முடியும் தருவாயில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்தப் படம் தவிர்த்து சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் அவர் நடிக்கவிருப்பதாகவும் ஒரு தகவல் அரசல் புரசலாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதேசமயம் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு படத்தில் சிவா நடிப்பது உறுதியாகியிருக்கிறது. அந்தப் படத்தின் மீதும் ரசிகர்களுக்கு ஆவல் இருக்கிறது.

GOAT கேமியோ: வெங்கட் பிரபுவுடன் இருக்கும் நட்பின் காரணமாக GOAT படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் கேமியோ ரோல் செய்திருந்தார் சிவா. அதில் அவரிடம் துப்பாக்கியை பிடிங்க சிவா. க்ரவுண்ட்ல இருக்குற உயிர்கள் உங்களோட பொறுப்பு என்று விஜய் சொல்வதும்; அதற்கு, நீங்க ஏதோ முக்கியமான வேலையா போறீங்க; அதை நீங்க பார்த்துக்கோங்க; இதை நான் பார்த்துக்குறேன் என்று சிவா சொல்வதுமாக வசனங்கள் வந்தன. அதனைப் பார்த்த ரசிகர்கள் தமிழ் சினிமாவை சிவகார்த்திகேயனிடம் விஜய் ஒப்படைத்துவிட்டார் என்று கூறுகிறார்கள். மேலும் சமீபத்தில் பேசிய எஸ்கே, விஜய் சார் கொடுத்த துப்பாக்கி கனமாக இருக்கிறது; சரியாக கையாள வேண்டும் எனவும் கூறியிருந்தார்.

கீர்த்தி சுரேஷ் பேட்டி: இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் அளித்த ஒரு பேட்டியில் சிவகார்த்திகேயன் பற்றி பேசுகையில், 'சிவகார்த்திகேயனின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை நான் தெரிந்துகொள்ள வேண்டும். அதாவது அவர் ஒரு நாள் மூன்று குழந்தைகளையும் எப்படி சமாளிக்கிறார்?; எவ்வளவு கலகலவென இருக்கும் என்பதை தெரிந்துகொள்ள ஆசையாக இருக்கிறது” என்றார். முன்னதாக சிவாவும், கீர்த்தியும் சேர்ந்து ரஜினி முருகன், ரெமோ உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்திருக்கிறார்கள் என்பது நினைவுகூரத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X