ரஜினி படத்தில் கீர்த்தி சுரேஷ்.. சூர்யாவுடன் ஹரியும்.. பிறகு பாலாவும்!
Recommended Video
சென்னை: ப்ளூ சட்டை மாறன் படம் இயக்குவது தெரிந்த விஷயம்தான். இதன் முதல் கட்ட படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்து விட்டாராம்..!
அடுத்து, தர்பார் படம் முடிஞ்சிருச்சு.. சிறுத்தை சிவாவுடன் அடுத்த படம்.. ஹீரோயின் ஜோதிகா என்று சொன்னார்கள்.. முடிவும் பண்ணியாச்சு.. இப்போது கீர்த்தி சுரேஷும் இணைகிறாராம். ரோல் எப்படி இருக்கும் என்பது இப்போதே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஜினி படத்தில் 2 ஹீரோயின் புதுசு இல்லை.. ஆனால் ரஜினியையும் தாண்டி ஸ்கோர் செய்தால் அது அந்த ஹீரோயின்களுக்கு செம பலம்.

விஜய்யின் பிகில் சாட்டிலைட் விற்பனயைில் பெரிய சாதனை படைத்து விட்டதாம். ரிலீஸிலும் அது கலக்கி வருகிறது. பெரிய சாதனைகளை பிகில் படைக்கும் என்பதில் சந்தேகமில்லை.
சூர்யா நடிக்கப் போகும் அடுத்த படம் சிங்கம் 4 என்று சொல்கிறார்கள். ஆனால் ஹரியுடன் அவர் இணையும் அடுத்த படம் புதிய கதையாக இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. ஹரியும் அதை கிட்டத்தட்ட உறுதிப்படுத்தியுள்ளார். பாலாவும் ஒரு படம் இயக்கப் போகிறாராம். பார்க்கலாம்.. !


Click it and Unblock the Notifications











