ஸ்டைலா கெத்தா மாஸா கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட டிராவலிங் டைரிஸ் புகைப்படங்கள்!

சென்னை : மகாநடி என்ற ஒற்றை திரைப்படத்தின் மூலம் இந்தியாவையே தன்னுடைய நடிப்பால் திரும்பிப் பார்க்க வைத்த நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வருகிறார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து அண்ணாத்த திரைப்படத்தில் நாயகியாக நடித்து வர இதன் படப்பிடிப்பு கொரானா பரவல் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

படப்பிடிப்புகள் இல்லாததால் வெளிநாடுகளுக்கு சுதந்திர பறவை போல சுற்றித்திரியும் கீர்த்திசுரேஷ் சமீபத்தில் துபாய் சென்று வந்த அழகான புகைப்படங்களை இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார்.

கனவு கன்னியாக

கனவு கன்னியாக

தமிழ் சினிமாவில் இளவரசன் என போற்றப்பட்டு வரும் சிவகார்த்திகேயன் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகும் திரைப்படங்களுக்கு என்றுமே மிகப்பெரிய வரவேற்பு ரசிகர்களிடம் இருந்து வரும் நிலையில் இவர்கள் முதல்முறையாக இணைந்து நடித்த ரஜினி முருகன் மாபெரும் வெற்றி பெற்று இரண்டாவது திரைப்படத்திலேயே தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக மாறினார் கீர்த்தி சுரேஷ்.

நடிகையர் திலகம்

நடிகையர் திலகம்

மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்து கலக்கி வரும் கீர்த்தி சுரேஷ் மூத்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடித்து தேசிய விருது பெற்று பெருமை சேர்த்தார். இந்த திரைப்படம் தமிழில் நடிகையர் திலகம் என்ற பெயரில் வெளியாகி தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தது.

கொரானா தொற்று

கொரானா தொற்று

பேட்ட திரைப்படத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வர லாக்டவுனால் பல நாட்கள் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு சமீபத்தில் ஐதராபாத்தில் நடிகர்கள் அனைவரும் தனித்தனி விமானத்தின் மூலம் வரவழைக்கப்பட்டு படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த நிலையில் அங்கு இருந்த நான்கு பேருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டு படப்பிடிப்பு உடனடியாக நிறுத்தப்பட்டது.

ஸ்டைலா கெத்தா மாஸா

ஸ்டைலா கெத்தா மாஸா

படப்பிடிப்பு இல்லாததால் வெளிநாடுகளுக்கு சுதந்திரப் பறவை போல சுற்றி திரிந்து வரும் கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் துபாய் சென்று அட்டகாசங்கள் செய்தவாறு ஏற்கனவே சில புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் பயணிக்கும் போது கருப்பு கூலிங் கிளாஸ் உடன் செம ஸ்டைலிஷாக, ஸ்டைலா கெத்தா மாஸா பிளைட்டில் எடுத்த புகைப்படங்களை கீர்த்தி சுரேஷ் எப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களால் வர்ணிக்கப்படும் வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X