பிரம்மாண்ட ரிலீசுக்கு தயாராகும் மகேஷ்பாபு படம்... கீர்த்தி சொன்ன சூப்பர் அப்டேட்!
ஐதராபாத் : நடிகர் மகேஷ்பாபு, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் சர்க்காரு வாரி பட்டா. இந்தப் படம் கொரோனா காரணமாக ரிலீசுக்கு நீண்ட நாட்களாக காத்திருந்த நிலையில் தற்போது மே மாதம் 12ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசாக உள்ளது. இதையடுத்து இன்றைய தினம் பிரம்மாண்டமான அளவில் ட்ரெயிலர் லாஞ்ச் நிகழ்வு நடைபெறவுள்ளது.

நடிகர் மகேஷ்பாபு
நடிகர் மகேஷ் பாபு, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் சர்க்காரு வாரி பட்டா. இந்தப் படத்தில் முதல்முறையாக மகேஷ்பாபுவுடன் ஜோடி சேர்ந்துள்ளார் கீர்த்தி சுரேஷ். இயக்குநர் பரசுராம் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். படம் வரும் 12ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசாக உள்ளது.

தெலுங்கு சூப்பர்ஸ்டார்
தெலுங்கு படவுலகின் சூப்பர்ஸ்டாராக காணப்படும் மகேஷ்பாபுவின் சர்க்காரு வாரி பட்டா படத்திற்கு மிகச்சிறந்த எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்தப் படத்தை கொண்டாட்டத்துடன் எதிர்கொள்ள அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்தப் படம் கடந்த ஜனவரியிலேயே வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் சிலபல காரணங்களால் தற்போது ரிலீஸ் தள்ளிப் போயுள்ளது.

வரவேற்பை பெற்ற டீசர்
படத்தின் சூட்டிங் ஐதராபாத், துபாய், ஸ்பெயின் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. இதன் புகைப்படங்கள் வெளியாகி வரவேற்பை பெற்றன. மேலும் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் மிகுதியான வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் படத்தின் பிரமோஷன்களை படக்குழுவினர் முடுக்கி விட்டுள்ளனர்.

பிரம்மாண்ட ட்ரெயிலர் லாஞ்ச்
மேலும் இன்றைய தினம் படத்தின் ட்ரெயிலர் லாஞ்ச் மிகவும் பிரம்மாண்டமான வகையில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரம்மபுத்ராவில் இந்த நிகழ்ச்சி பிற்பகல் 3 மணியிலிருந்தே துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கென ரசிகர்கள் காத்திருக்கின்றனர். மகேஷ்பாபு என்றாலே பிரம்மாண்டம்தான் என்ற நிலையில் படத்தின் ட்ரெயிலர் லாஞ்ச் சிறப்பாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
Recommended Video

வங்கி அதிகாரியாக மகேஷ்பாபு
படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். மேலும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் படத்தை தயாரித்துள்ளது. படத்தில் வங்கி அதிகாரியாக மகேஷ் பாபு நடித்துள்ளார். நிதித்துறையின் பின்னணியை கதைக்களமாக இந்தப் படம் கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே படத்தின் நாயகி கீர்த்தி சுரேஷ் படம் குறித்த அப்டேட்டை வெளிப்படுத்தியுள்ளார்.

ரசிகர்களுக்கு மிகச்சிறந்த ட்ரீட்
படத்தில் கலாவதி என்ற கேரக்டரில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். படத்தின் டப்பிங் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் முடித்துள்ளதாகவும் மகேஷ்பாபுவை திரையரங்குகளில் பார்க்க தான் மற்றவர்களை போலவே காத்திருப்பதாகவும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். ரசிகர்களுக்கு இந்தப் படம் மிகச்சிறந்த ட்ரீட்டாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











