கர்ப்பமான கீர்த்தி சுரேஷ்.. பிறந்த நாள் அதுவுமா என்னம்மா இப்படி பண்ணிட்டியேம்மா?
கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி வரும் கீர்த்தி சுரேஷின் 24வது படத்திற்கு பென்குயின் என தலைப்பிட்டுள்ளனர்.
Recommended Video
சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இந்நிலையில், அவர், கர்ப்பமாக இருப்பது போன்று ஒரு போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.
என்னது கீர்த்தி சுரேஷ் கர்ப்பம் ஆகிட்டாரா அப்படின்னு யாரும் பதற வேண்டாம். கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பு நிறுவனமான ஸ்டோன் பெஞ்ச் தயாரிப்பில் உருவாகி வரும் பென்குயின் படத்தின் போஸ்டர் தான் அது.

பீட்சா தொடங்கி ரஜினியின் பேட்ட என இயக்கத்தில் கலக்கி வரும் கார்த்திக் சுப்பராஜ், மேயாத மான், மெர்க்குரி என தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷின் 24வது படத்தை கார்த்திக் சுப்பராஜ் தயாரித்து வருகிறார்.
கீர்த்தி சுரேஷின் பிறந்த நாளான இன்று அந்த படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி உள்ளது. டைட்டில் போஸ்டரில் கீர்த்தியின் உருவம் நிழல் போல சில் அவுட்டில் தெரிந்தாலும், அவரது வயிற்று பகுதி வீங்கி கர்ப்பவதியாக அவர் இருப்பதை காட்ட தவறவில்லை.
நடிகையர் திலகம் படத்திற்கு பிறகு நல்ல நடிப்புக்கு தீணி போடும் கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் கீர்த்தி சுரேஷுக்கு, பென்குயின் படமும் நல்ல படமாக அமையும் வாய்ப்புகள் முதல் பார்வையிலே தெரிகிறது.
தமிழ் மற்றும் தெலுங்கில் தனக்கான மிகப்பெரிய மார்க்கெட்டை கீர்த்தி சுரேஷ் வைத்திருப்பதால், இந்த படத்தையும் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வருகிறது.
பாலிவுட்டில் அஜய் தேவ்கனுடன் ஒரு படத்திலும், தெலுங்கில் மிஸ் இந்தியா படத்திலும் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் அடுத்ததாக பென்குயின் படத்திலும் நடித்து வருகிறார். மேலும், தலைவர் 168 மற்றும் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் உள்ளிட்ட பிரம்மாண்ட படங்களிலும் கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளார் என்ற செய்திகள் வந்த வண்ணமாக உள்ளது.
இன்று பிறந்த நாளை கொண்டாடி வரும் கீர்த்தி சுரேஷுக்கு வரும் ஆண்டு இந்தியளவில் புகழ் பெறும் வாய்ப்பு பிரகாசமாகிக் கொண்டே போகிறது.
பிறந்த நாள் வாழ்த்துக்கள் கீர்த்தி சுரேஷ்!


Click it and Unblock the Notifications











