மமிதா பைஜு முட்டி போட்டபோது வந்த வசனம் தப்பு ப்ரோ.. விமர்சித்த ரசிகை.. டியூட் இயக்குநரின் மோசமான ரிப்ளை
சென்னை: சுதா கொங்கராவிடம் உதவி இயக்குநராக இருந்த கீர்த்திஸ்வரன் இயக்குநராக அறிமுகமான படம் டியூட். பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு, சரத்குமார், ரோகிணி உள்ளிட்டோர் நடித்திருந்த அப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த மாதம் வெளியாகி மெகா ஹிட்டாகி 100 கோடி ரூபாயை வசூலித்தது. ஆனாலும் படத்தில் மமிதா பைஜு முட்டி போடும் சீனில் வந்த வசனம் பலரிடமும் கண்டனத்தை ஏற்படுத்தியது.
பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்க; கீர்த்திஸ்வரன் இயக்கிய படம் டியூட். கீர்த்திக்கு இதுதான் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் பிரதீப்புக்கு ஜோடியாக மமிதா பைஜு நடித்திருந்தார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருந்தது. இதற்கு முன்னதாக பிரதீப் நடித்திருந்த டிராகன், லவ் டுடே ஆகிய இரண்டு படங்களுமே 100 கோடி ரூபாய் க்ளப்பில் இணைந்திருந்ததால் இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு எகிறியிருந்தது.
மெகா ப்ளாக் பஸ்டர்: எதிர்பார்த்தபடியே படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. ஷாஜகான், பூவே உனக்காக, அந்த ஏழு நாட்கள் டைப் கதைதான் என்றாலும் இந்தத் தலைமுறை ரசிகர்களுக்கு பிடிக்கும்வகையில் அதனை இயக்குநர் ப்ரெசண்ட் செய்தது; படத்தில் பேசப்பட்ட கருத்துக்கள் என பல விஷயங்கள் ஒர்க் அவுட் ஆனதன் காரணமாக படம் அதிரிபுதிரி ஹிட்டடித்தது. வசூலிலும் சக்கைப்போடு போட்டு 110 கோடி ரூபாய்வரை வசூலித்தது.

கண்டனமும் எழுந்தது: படத்தில் பேசப்பட்ட பல விஷயங்களுக்கு பாராட்டுக்கள் குவிந்தாலும்; படத்தின் ஒரு சீனில் பிரதீப் ரங்கநாதன் முன்பு மமிதா பைஜு முட்டிப்போடும்போது வரும் வசனத்தை எல்லோருமே கண்டித்தார்கள். தாலிக்கு மரியாதை இல்லை; அதற்கு பின்னால் இருக்கும் பெண்ணின் உணர்வுக்குத்தான் மரியாதை என்று வசனம் எழுதிய இயக்குநர்தான்; ஒரு பெண் ஆசையோடு காதலை சொல்ல முட்டி போடும்போது ஆபாச சிந்தனையோடு வசனம் எழுதியிருக்கிறார். எனில் இதில் அந்த இயக்குநர் எந்த மைண்ட் செட்டை உடையவர் என்றும் கேள்வி எழுப்பினார்கள்.
மழுப்பிய இயக்குநர்: அது பெரிய விவாதத்தை கிளப்பிய நிலையில் ரிலீஸுக்கு பிறகு பேட்டி ஒன்றில் அதுகுறித்து பேசியிருந்த கீர்த்திஸ்வரன், நெருங்கிய நட்போடு இருக்கும் ஆணும் பெண்ணும் இப்படித்தான் பேசிக்கொள்வார்கள் என்று ஒரே போடாக போட்டார். அது மேலும் அபத்தமாக இருந்தது. சோஷியல் மீடியாவில் சகட்டுமேனிக்கு கீர்த்தியை அடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். ஒருவழியாக அந்த விவகாரம் ஓய்ந்திருந்த நிலையில் இப்போது மீண்டும் கிளம்பியிருக்கிறது.
என்ன ஆனது?: அதாவது ரசிகை ஒருவர் கீர்த்திஸ்வரனின் அந்தப் பேட்டியை குறிப்பிட்டு அவருக்கு இன்ஸ்டாகிராமில், "மமிதா பைஜு முட்டிப்போடும்போது வரும் வசனம் பற்றிய உங்களது பேட்டியை பார்த்தேன். நீங்கள் அதை நார்மலைஸ் செய்திருக்கிறீர்கள். நல்ல நண்பர்களாக இருக்கும் ஆணும் பெண்ணும் எப்போதும் இதுபோன்று பேசிக்கொள்ளமாட்டார்கள். அதேபோல் படத்தின் பல சீன்களுக்கிடையே எந்த கனெக்ஷனும் இல்லை" என்று மெசேஜ் செய்திருக்கிறார்.
மோசமான ரிப்ளை: அதற்கு கீர்த்திஸ்வரனோ தன் பக்கம் இருக்கும் தவறை உணராமல், எனக்கு மெசேஜ் செய்வதற்கு பதிலாக உனக்கான ஒரு வாழ்க்கையை உருவாக்கிக்கொள் என்று பதிலளித்திருக்கிறார். இதனை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து பகிர்ந்திருக்கும் அந்த ரசிகை, 'அந்தப் பேட்டியையும் படத்தையும் பார்த்துவிட்டு எனது நியாயமான விமர்சனத்தை இயக்குநரிடம் முன்வைத்தேன். அதற்கு அவர் இப்படி ரிப்ளை செய்திருக்கிறார்.இதில் அவரது மைண்ட் செட் நன்றாகவே தெரிகிறது. விமர்சனங்களை ஒரு புது இயக்குநர் இப்படித்தான் கையாள்வதா என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











