‘நீங்க இப்பத்தான், ஆனா நான் எப்பவோ’.. போட்டி போட்டு ‘புல்லரிக்க’ வைத்த சாமி 2 ஹீரோயின்ஸ்!
சாமி 2 படவிழாவில் கீர்த்தியும், ஐஸ்வர்யாவும் ஒருவரை ஒருவர் பாராட்டிக் கொண்டனர்.
Recommended Video

சென்னை: சாமி ஸ்கொயர் ஆடியோ விழா மேடையில் நடிகைகள் கீர்த்தி சுரேஷும், ஐஸ்வர்யா ராஜேஷும் ஒருவரை ஒருவர் பாராட்டிக் கொண்டனர்.
ஹரி இயக்கத்தில் விக்ரம் நாயகனாக நடித்துள்ள சாமி ஸ்கொயர் படத்தின் ஆடியோ ரிலீஸ் சென்னையில் நேற்று நடைபெற்றது. தந்தை, மகன் என விக்ரம் இரண்டு வேடங்களில் நடித்துள்ள, இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரும் நாயகிகளாக நடித்துள்ளனர்.
இந்நிலையில், ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு வந்திருந்த நடிகைகள் இருவரும் ஒருவரை ஒருவர் மாறி மாறிப் புகழ்ந்தது பார்வையாளர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

பாராட்டு மழை:
அதாவது, முதலில் பேச வந்த ஐஸ்வர்யா, ‘கீர்த்தி சுரேஷின் நடிகையர் திலகம் படம் பார்த்து, அவரது ரசிகையாகி விட்டதாக' தெரிவித்தார். அப்படத்தில் கீர்த்தியின் நடிப்பை அவர் பெரிதும் பாராட்டினார். அதனைத் தொடர்ந்து அடுத்ததாகப் பேச வந்த கீர்த்தி, ‘நீங்கள் இப்போது தான் என் ரசிகை, ஆனால் நான் உங்கள் காக்காமுட்டை படம் பார்த்தது முதலே உங்கள் ரசிகை" எனப் பாராட்டினார்.

நண்பர்கள்:
எம்.ஜி.ஆர்., சிவாஜி காலங்களில் ஒரே படத்தில் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்திருந்தாலும் கூட, அவர்களுக்குள் அவ்வளவாக பிரச்சினை வந்ததில்லை. தங்களது கதாபாத்திரத்தின் வேலையை கச்சிதமாக செய்தனர். கேமராவுக்கு வெளியே பெரும்பாலும் அனைவருமே நண்பர்களாக இருந்தனர். நடிப்பின் முழு அர்த்தத்தையும் அவர்கள் உணர்ந்திருந்தனர்.

முட்டிக் கொள்ளும் நடிகைகள்:
ஆனால், இப்போது நிலைமையே வேறு. இரு நாயகர்கள் அல்லது நாயகிகள் நடிக்கும் படமென்றால், இயக்குநருக்கு தலையில் உள்ள முடிகள் எல்லாம் கொட்டாத குறைதான். அந்தளவிற்கு தனது கதாபாத்திரத்திற்குத் தான் முக்கியத்துவம் தர வேண்டும் என பிய்த்து எடுத்து விடுகின்றனர்.

பாராட்டுக்கள்:
ஆனால், இவர்களில் இருந்து வேறுபட்டு நடிகைகள் கீர்த்தி சுரேஷும், ஐஸ்வர்யா ராஜேஷும் ஒருவரின் நடிப்பை மற்றவர் புகழ்ந்து, மேடையில் வெளிப்படையாக நான் உங்கள் ரசிகை எனக் கூறியது ஆச்சர்யமாக இருந்தது. இந்த ஆரோக்கிய மனப்பாங்கு நிச்சயம் பாராட்டப்பட வேண்டியது.


Click it and Unblock the Notifications











