Keerthy Suresh - ரஜினிக்காக கீர்த்தி சுரேஷ் எதையெல்லாம் மிஸ் பண்ணியிருக்காங்க பாருங்க.. விவரம் உள்ளே

சென்னை: Keerthy Suresh (கீர்த்தி சுரேஷ்) ரஜினியுடன் நடிப்பதற்காக கீர்த்தி சுரேஷ் செய்த செயல்கள் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார் கீர்த்தி சுரேஷ். ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவான இது என்ன மாயம் படத்தின் மூலம்தான் தமிழில் அவர் அறிமுகமானார். அந்தப் படம் சரியாக போகாவிட்டாலும் கீர்த்தியின் அளவான நடிப்பும், அழகும் ரசிகர்களை கவர்ந்தது.. இதனையடுத்து அவர் நடித்த ரஜினி முருகன் திரைப்படம் மெகா ஹிட்டானது. இதனால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தன.

Keerthy Missed the Ponniyin selvan movie for Rajinikanths Annathe Movie

முன்னணி நடிகர்களுடன்: அதன்படி விஜய்யுடன் பைரவா, விக்ரமுடன் சாமி 2, சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம், சிவகார்த்திகேயனுடன் ரெமோ என வரிசையாக நடித்தார். தமிழில் அவர் கமர்ஷியல் படங்கள் நடித்தாலும் தெலுங்கில் சாவித்திரியின் வாழ்க்கை வரலாறான மகாநடி படத்தில் நடித்தார்.

தேசிய விருது: படத்தை பார்த்த அனைவருமே வாயடைத்துப்போனார்கள். அதற்கு காரணம் அந்தப் படத்தில் சாவித்திரியாகவே மாறிவிட்டார் கீர்த்தி சுரேஷ். படம் மெகா ஹிட்டாகி கீர்த்திக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது மட்டுமின்றி சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றுக்கொடுத்தது. இதன் காரணமாக இந்திய அளவில் பிரபலமடைந்தார்.

மாமன்னன் கீர்த்தி சுரேஷ்: தமிழ் பக்கம் பெரிதாக தலைகாட்டாமல் இருந்த அவர் சமீபத்தில் மாமன்னன் படத்தில் நடித்திருந்தார். படம் ஜூன் 29ஆம் தேதி வெளியானது. லீலாவதி என்ற கம்யூனிஸ்ட் கதாபாத்திரத்தில் சிறப்பாகவே நடித்திருந்தார். இருந்தாலும் வடிவேலு, ஃபகத் பாசில் என்ற மகா நடிகர்களின் பெர்பார்மன்ஸுக்கு மத்தியில் கீர்த்தியின் நடிப்பு கவனிக்கப்படாமல் போனது.

Keerthy Missed the Ponniyin selvan movie for Rajinikanths Annathe Movie

அடுத்த படங்கள்: மாமன்னன் படத்திற்கு அடுத்ததாக அவரது நடிப்பில் ரிவால்வர் ரீட்டா, சைரன், ரகுதாத்தா உள்ளிட்ட படங்கள் வெளியாகவிருக்கின்றன. சைரன் படத்தில் ஜெயம் ரவி நடிக்கிறார் என்பதும் கீர்த்தி சுரேஷ் காவல் துறை அதிகாரியாக நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் ரஜினிகாந்த்துடன் நடிப்பதற்காக கீர்த்தி சுரேஷ் சில படங்களை தவறவிட்டதாக கூறப்படுகிறது.

என்ன படங்கள்: அதாவது சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த படத்தில் அவருக்கு தங்கையாக நடித்தார் கீர்த்தி சுரேஷ். இந்தப் படத்தில் நடிக்க வேண்டும் என்பதற்காக பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தை மிஸ் செய்தாராம். அதேபோல் நானி - சாய் பல்லவி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ஷ்யாம் சிங்கா ராய் படத்தையும் வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம். ஆனால் ரொம்பவே எதிர்பார்த்த அண்ணாத்த படம் படுதோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X