Keerthy Pandian - கீர்த்தி பாண்டியனின் பிறந்தநாள் கொண்டாட்டம்.. தாய்லாந்தில் கணவருடன் செம ஜாலி

சென்னை: நடிகர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன். கடந்த 2019ஆம் ஆண்டிலிருந்து தமிழ் சினிமாவிலிருந்து நடித்துவரும் அவர் கடைசியாக கண்ணகி மற்றும் ப்ளூ ஸ்டார் படங்களில் நடித்திருந்தார். சில மாதங்களுக்கு முன்பு நடிகர் அசோக் செல்வனை திருமணம் செய்துகொண்டார். ப்ளூ ஸ்டார் படத்தில் இணைந்து நடித்தபோது இரண்டு பேருக்குமிடையே ஏற்பட்ட பழக்கம் திருமணத்தில் முடிந்தது. தற்போது கீர்த்தி பாண்டியன் தனது பிறந்தநாளை தாய்லாந்தில் கணவர் அசோக் செல்வனோடு கொண்டாடிய புகைப்படங்கள் ட்ரெண்டாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பெயர் எடுத்த நடிகராக திகழ்ந்தவர் அருண் பாண்டியன். ஆக்‌ஷன் ஹீரோவாக அறியப்பட்ட அவருக்கு கீர்த்தி பாண்டியன் என்ற மகள் இருக்கிறார். தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டாக இருந்த கீர்த்தி பாண்டியன் தும்பா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அந்தப் படமானது கடந்த 2019ஆம் ஆண்டு வெளியானது. படத்துக்கு போதிய வரவேற்பு கிடைக்காவிட்டாலும் கீர்த்தி பாண்டியனுக்கு ஓரளவு நல்ல பெயரே கிடைத்தது.

Keerthy pandian And Ashok Selvan Photos Goes Trending on Social Media

அடுத்தடுத்த படங்கள்: தும்பா படத்துக்கு பிறகு அன்பிற்கினியாள் படத்தில் நடித்தார். அதில் அருண் பாண்டியனும் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. கீர்த்தி பாண்டியன் நடிப்பில் வெளியான கண்ணகி படத்துக்கு நல்ல ரெஸ்பான்ஸையே ரசிகர்கள் கொடுத்தனர்.குறிப்பாக கீர்த்தி பாண்டியனின் நடிப்புக்கும் ரசிகர்கள் தங்களது பாராட்டை தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ப்ளூ ஸ்டார் டூ திருமணம்: அடுத்ததாக அவரது நடிப்பில் ப்ளூ ஸ்டார் திரைப்படம் வெளியானது. பா.இரஞ்சித் தயாரிப்பில் அசோக் செல்வன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். படத்துக்கு சூப்பர் வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் நடித்தபோதுதான் அசோக் செல்வனுக்கும், கீர்த்தி பாண்டியனுக்கும் காதல் ஏற்பட்டது. இருவரின் காதலுக்கும் வீட்டாரின் சம்மதம் கிடைக்க சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. அந்தத் திருமணத்திலிருந்து கீர்த்தி மேற்கொண்டு அடையாளப்பட்டார்.

உருவ கேலி: முக்கியமாக கீர்த்தி பாண்டியன் அசோக் செல்வனை திருமணம் செய்துகொண்டதால் அவரது உருவத்தை வைத்து கேலி செய்தனர். ஆனால் அப்படி செய்தவர்களுக்கு அசோக் தரமான பதிலடியை கொடுத்தார். அதுமட்டுமின்றி எல்லோரையும் வம்பிழுக்கும் பயில்வான் ரங்கநாதனை ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் எங்கள் வீட்டில் சண்டை என்று நீங்கள் வந்து பார்த்தீர்களா என கேள்வி கேட்டு சம்பவம் செய்தார் கீர்த்தி.

மேலும் அசோக் செல்வனிடம், திருமணத்துக்கு பிறகு கீர்த்தி பாண்டியன் நடிப்பாரா என்று பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அசோக், நான் ஒன்றும் கீர்த்தி பாண்டியனுக்கு ஓனர் கிடையாது என்று சாட்டையடி பதில் கொடுத்தார்.கீர்த்தி மற்றும் அசோக்கின் செயல்களையும், பதில்களையும் நெட்டிசன்கள் இணையத்தில் கொண்டாடினர்.மேலும் சிறந்த ஜோடியாக இவர்கள் வலம் வருவார்கள் என்றும் கூற ஆரம்பித்தனர்.

தாய்லாந்தில் ஜாலி: இந்நிலையில் நடிகை கீர்த்தி பாண்டியன் பிப்ரவரி 18ஆம் தேதி தனது 32ஆவது பிறந்தநாளை கொண்டாடவிருக்கிறார். திருமணமான பிறகு வரும் முதல் பிறந்தநாள் என்பதால் இதனை சிறப்பாக கொண்டாட முடிவு செய்திருக்கும் அவர் தனது கணவர் அசோக் செல்வனுடன் தாய்லாந்து சென்றிருக்கிறார். ஏறத்தாழ ஒருவாரம் அங்கு அவர்கள் தங்கவிருக்கிறார்கள் என்று தெரிகிறது. இச்சூழலில் தாய்லாந்து மற்றும் அந்நாட்டின் கடற்கரையில் கீர்த்தி பாண்டியன் பிகினியோடு இருக்கும் புகைப்படங்களும், அசோக் செல்வனுடன் ஜாலியாக ஊர் சுற்றும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X