என்னாது, ஜெயலலிதாவாக நடிக்கிறாரா கீர்த்தி சுரேஷ்?: ரசிகர்கள் அதிர்ச்சி
Recommended Video

சென்னை: ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் கீர்த்தி சுரேஷை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளார்களாம்.
நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மகாநதி என்று பெயர் வைக்கப்பட்ட படம் ரிலீஸாகியுள்ளது.
படத்தை பார்த்த பிரபலங்கள் கீர்த்தி சுரேஷின் நடிப்பை பாராட்டியுள்ளனர்.

ரசிகர்கள்
மகாநதி படத்தை பார்த்த பிரபலங்கள் கீர்த்தி சாவித்ரியாகவே மாறிவிட்டதாக தெரிவித்துள்ளனர். ரசிகர்கள் பலரோ சாவித்ரியாக கீர்த்தியை பார்க்க முடியவில்லை. கீர்த்தி பெருமுயற்சி செய்துள்ளார் அதை பாராட்டியே ஆக வேண்டும். ஆனால் அவரால் சாவித்ரியாக முடியவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

படம்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கும் முயற்சி நடந்து வருகிறது. இந்நிலையில் ஜெயலலிதாவாக கீர்த்தி சுரேஷை நடிக்க வைக்கலாமா என்று யோசனையில் உள்ளார்களாம்.

ரம்யா கிருஷ்ணன்
நடிப்பில் மிரட்டும் ரம்யா கிருஷ்ணன் தான் தன்னம்பிக்கை மிகுந்த ஜெயலலிதாவாக நடிக்க பொருத்தமானவர் என்று ரசிகர்கள் கருதுகிறார்கள். ஜெயலலிதாவாக நடிக்க ரம்யாவும் ஆர்வமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வேண்டாம்
ஜெயலலிதாவாக கீர்த்தி சுரேஷ் ஒத்தே வர மாட்டார். இந்த விபரீத முயற்சி வேண்டாம் என்று ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள். ஜெயலலிதாவின் கம்பீரம் ரம்யா கிருஷ்ணனிடம் தான் உள்ளது என்று கூறப்படுகிறது. ரசிகர்கள் கூறி என்ன செய்ய, இயக்குனர் யாரை தேர்வு செய்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











